Tamil News
Tamil News
Friday, 24 Mar 2023 12:30 pm
Tamil News

Tamil News

தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுல்காந்தி 

கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவையின் தேர்தல் பிரச்சாரத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் குறித்து ராகுல் காந்தி அவதூறு பேசியதாக வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு  ஆண்டுகள் சிறை தண்டவை விதித்து தீர்ப்பளித்தது.  இதைத்தொடர்ந்து எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. இது இந்திய அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த நடவடிக்கைக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பு 

இந்த நிலையில் எம்பி பதவியில் இருந்து ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், இந்த சட்டப்பிரிவை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எம்பிக்கள், எம்எல்ஏக்களை தகுதி நீக்க செய்யும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தண்டனை விதிக்கப்பட்டதும் தகுதி நீக்கம் செய்யும் சட்டப்பிரிவு 8(3)- ஐ சட்ட விரோதமானது என அறிவிக்கக்கோரி பொதுநல மனு தாக்கல் செயப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.