Tamil News
Tamil News
Sunday, 26 Mar 2023 12:30 pm
Tamil News

Tamil News

ராகுல் காந்தியின் நாடாளுமன்ற கேள்விகள்

2014-ம் ஆண்டு 8 பில்லியன் டாலராக (ரூ.66 ஆயிரம் கோடி) இருந்த அதானியின் சொத்து மதிப்பு எப்படி 2022-ல் 140 பில்லியன் டாலராக (ரூ.11.58 லட்சம் கோடி) மாறியது. உலக பணக்காரர்கள் பட்டியலில் 609-வது இடத்தில் இருந்தவர் எப்படி 8 ஆண்டுகளில் 2-வது இடத்துக்கு முன்னேறினார். அதானிக்கும் பிரதமர் மோடிக்கும் இடையில் என்ன தொடர்பு என்று கேள்வி எழுப்பி இருந்தார். மேலும், பிரதமர் மோடி ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். உடனே, எஸ்பிஐ அதானிக்கு 1 பில்லியன் டாலர் (ரூ.8,275 கோடி ) கடன் வழங்குகிறது. பிரதமர் மோடி வங்கதேசம் செல்கிறார். உடனே அந்நாட்டு அரசு அதானியுடன் 25 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் மேற்கொள்கிறது. 

காற்றாலை திட்டத்தை அதானிக்கு வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடி இலங்கை அதிபருக்கு அழுத்தம் தந்ததாக கடந்த ஆண்டு இலங்கை மின்வாரியத் தலைவர் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார்.  விமானத் துறையில் எந்த அனுபவமும் இல்லாத அதானியின் கையில் இந்தியாவின் 6 விமான நிலையங்கள் உள்ளன. மிகச் சிறப்பாக செயல்பட்டுவந்த மும்பை விமான நிலையத்தை ஜிவிகே குழுமத்திலிருந்து பறித்து அதானி குழுமத்துக்கு மத்திய அரசு வழங்கியது. பாதுகாப்புத் துறையில் அதானி குழுமத்துக்கு எந்த முன் அனுபவமும் கிடையாது. ஆனால், அத்துறையில் நான்கு ஒப்பந்தங்கள் அதானி வசம் உள்ளன.

எத்தனை முறை நீங்களும் (மோடி) அதானியும் ஒன்றாக பயணம் செய்துள்ளீர்கள், எத்தனை தடவை நீங்கள் வெளிநாடு சென்ற பிறகு அங்கு அதானி உங்களைச் சந்தித்து இருக்கிறார், நீங்கள் எந்த நாட்டுக்கு பயணம் மேற்கொள்கிறீர்களோ அந்த நாட்டுடன் அதானிக்கு எத்தனை தொழில் ஒப்பந்தங்கள் கிடைத்துள்ளன என்று ராகுல் காந்தி பேசி இருந்தார்.

தகுதி நீக்க நடவடிக்கை

இந்தநிலையில், நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசியது ஆளும் கட்சியினர் மத்தியில் ஒரு பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. மோடிக்கு எதிராக கேள்வி எழுப்பக்கூடாது என்பதற்காக, 2019-ல் கர்நாடகத்தில் பேசியதை குஜராத்தில் வழக்கு தொடுக்கிறார்கள் என்று ராகுல் காந்தி தற்போது தகுதி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ராகுல் காந்தி தகுதி நீக்கம் குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கருத்து தெரிவித்திருக்கிறார். "நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசக்கூடாது என்பதுதான் பிரச்சனை. பொதுவெளியில் அவர் எவ்வளவு பேசினாலும், மோடி பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் நாடாளுமன்றத்தில் பேசும்போது பதில் சொல்ல வேண்டிய அவசியம் மோடிக்கு உள்ளது. அந்த அவசியத்தை செய்தால் பிரச்சனை வரும் என்பதாலும், உண்மை வெளிப்படும் என்பதால் பேசத் தயங்குகிறார்கள். நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது எதிர்க்கட்சிகள் பேச வேண்டும். ஆளும் கட்சி பதில் அளிக்க வேண்டும். எதிர்க்கட்சிகளை பேச அனுமதி மறுப்பது என்பது என்ன பொருள்" என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். 

'மோடி' என்ற பெயர் பற்றி அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்ட சில மணி நேரங்களிலேயே ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இந்த வழக்கை மேற்கோள்காட்டி ராகுல் காந்தியை எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும், பிப்ரவரி 7-ம் தேதி நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி எழுப்பிய கேள்விகளை முன்வைத்துதான் ஆளும்கட்சி இந்த தகுதி நீக்க நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது என்று எதிர்க்கட்சி தரப்பில் வைக்கப்படுகிற வாதம்.