Tamil News
Tamil News
Tuesday, 28 Mar 2023 12:30 pm
Tamil News

Tamil News

224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டசபையின் பதவிக்காலம் மே 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. கர்நாடகாவில் தற்போது முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பாஜக ஆட்சியில் இருந்து வருகிறது. இந்தநிலையில், இந்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ள கர்நாடக சட்டசபை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் தற்போது வெளியிட்டுள்ளது. 

அந்தவகையில், கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தொடக்கம் ஏப்ரல் 13-ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி  நாள் ஏப்ரல் 20-ம் தேதி. வேட்புமனு பரிசீலனை ஏப்ரல் 21-ம் தேதி. வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் ஏப்ரல் 24-ம் தேதி.

கர்நாடகா சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு மே 10-ம் தேதி நடைபெறும். வாக்குப்பதிவு எண்ணிக்கை மே 13-ம் தேதி அறிவிக்கப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.