Tamil News
Tamil News
Thursday, 30 Mar 2023 12:30 pm
Tamil News

Tamil News

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விரைந்து முடிக்க சிபிசிஐடி திட்டமிட்டுள்ளது. 

விசாரணை

நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ந் தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதனை தடுக்கச் சென்ற காவலாளி ஓம்பகதூர் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். ஊட்டி செசன்ஸ் கோர்ட்டில் இந்த வழக்கு நடந்து வருகிறது. திமுக அரசு பொறுப்பேற்றதும் இந்த வழக்கு தொடர்பாக மறுவிசாரணை நடத்தப்பட்டது. ஜெயலலிதாவின் தோழி சசிகலா, முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி உள்பட 320 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

வாக்குறுதி

இந்த நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையில் 49 பேர் கொண்ட போலீசார் மூன்று குழுக்களாக பிரிந்து இந்த வழக்கை விசாரித்து வந்தனர். கொடநாடு வழக்கை விரைந்து முடிக்க சிபிசிஐடி போலீசார் கடந்த ஆண்டே திட்டமிட்டிருந்தனர். திமுக வாக்குறிதியில் கொடநாடு வழக்கிற்கு தீர்வு காணப்படும் அறிவித்திருந்தனர். ஆனால், திமுக ஆட்சிப்பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகளை கடந்துள்ளநிலையில், கொடநாடு வழக்கிற்கு இதுவரைக்கும் தீர்வு காணப்படவில்லை.  

தீர்வு காணப்படுமா

இந்தநிலையில், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை மீண்டும் சிபிசிஐடி தூசியை கிளப்பியிருக்கிறது. கோடநாடு, கொலை, கொள்ளை வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்க சிபிசிஐடி திட்டமிட்டுள்ளது. தினமும் 2 முதல் 3 நபர்களை விசாரித்து வழக்கை விரைந்து முடிக்க சிபிசிஐடி காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். திமுக வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கில் ஒரு பக்கம் செயல்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில், அதிமுக பாஜக கூட்டணி உறுதி மற்றும் எடப்பாடி பழனிசாமி அடுத்த மாதம் டெல்லி விஜயம் உள்ளிட்ட சூழல்களில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கிற்கு சரியான தீர்வு காணப்படுமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுகிறது.