Tamil News
Tamil News
Monday, 03 Apr 2023 12:30 pm
Tamil News

Tamil News

தமிழகத்தில் மட்டும் 5.69 லட்சம் தமிழாசிரியர்கள் தேவை என மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இன்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில், ஒவ்வொரு மாநிலங்களிலும் மொழிப்பாடத்திற்கு தேவையான பணியிட விவரங்களை அறிவிக்குமாறு ஒடிசா எம்.பி. சந்திரசேகர் சாகு கேள்வி எழுப்பினார். எம்.பி. சந்திரசேகர் சாகுவின் கேள்விக்கு மத்திய கல்வி அமைச்சர் அன்னபூர்ணா எழுத்துப்பூர்வ பதில் அளித்தார்.

அவர் அளித்துள்ள பதிலில், நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் அந்தந்த மாநில மொழி பாட ஆசிரியர்கள் தேவை அதிக அளவில் உள்ளது என தெரிவித்தார். குறிப்பாக, தமிழகத்தில் மட்டும் 5 லட்சத்து 69 ஆயிரத்து 920 தமிழ் ஆசிரியர்கள் தேவை என மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், புதுச்சேரியில் 5,976 பணியிடங்களும், கேரளாவில் 1,271 பேரும், ஆந்திராவில் 1,268 பேரும், தமிழாசிரியர்கள் தேவை என்று விளக்கம் அளித்தார்.

மேலும், தெலங்கானா மாநிலத்தில் 511 பேரும், கர்நாடகா மாநிலத்தில் 442 பேரும், தமிழாசிரியர்கள் மட்டும் தேவை என விளக்கம் அளித்துள்ளனர். அதுபோக, பிற மாநில மொழிப்பாட ஆசிரியர்களுக்கும் அதிக தேவை இருப்பதாக மத்திய கல்வி அமைச்சகம் பதில் அளித்துள்ளது. மும்மொழி கொள்கையை மாநிலங்கள் ஏற்க, மத்திய அரசு வலியுறுத்துவதாகவும் மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.