Tamil News
Tamil News
Monday, 03 Apr 2023 12:30 pm
Tamil News

Tamil News

உலகின் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி. 

மார்னிங் கன்சல்ட்!

உலகில் உள்ள அனைத்து நாடுகளின் தலைவர்கள் எடுக்கும் முக்கிய முடிவுகளின் அடிப்படையில் அவர்களுக்கு இருக்கும் செல்வாக்கு தொடர்பாக சர்வதேச ஆய்வு நிறுவனமான மார்னிங் கன்சல்ட் என்ற நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. கடந்த மார்ச் 22 முதல் 28 வரை நடத்தப்பட்ட இந்த ஆய்வு ஒவ்வொரு நாட்டிலும் ஆன்லைனில் நடத்தப்பட்டுள்ளது. 

டாப் 22 தலைவர்கள்

இதன் அடிப்படையில் 22 தலைவர்களின் பட்டியலை வரிசைப்படுத்தி, உலகின் மிகவும் பிரபலமான தலைவர்களின் பட்டியலை ‘தி மார்னிங் கன்சல்ட்’ நிறுவனம் வெளியிட்டு உள்ளது. 

முதலிடம் பிடித்த மோடி!

‘தி மார்னிங் போஸ்ட்’ தகவலின்படி  பிரதமர் நரேந்திர மோடி 76 சதவீதம் வாக்குகள் பெற்று உலகின் முதல் பிரபலமான தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும், 19 சதவீதம் பேர் ஏற்கத்தக்கவை இல்லை என்றும், 5 சதவீதம் பேர் கருத்து சொல்ல விரும்பவில்லை என்றும் கூறியுள்ளனர்.  

அடுத்தடுத்து தலைவர்கள்!

மெக்ஸிகோ அதிபர் ஆண்ட்ரெஸ் மானுவல் லோபஸ் ஒப்ரடோர் 61 சதவீதம் பெற்று 2வது இடமும், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் 55 சதவீதம் பெற்று 3வது இடமும் பிடித்துள்ளனர். இதில் 53 சதவீத ஆதரவுடன் ஸ்விட்சர்லாந்து அதிபர் அலைன் பெர்செட் 4வது இடமும்,  49 சதவீதம் ஆதரவுடன் பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா 5வது இடமும், 49 சதவீதம் ஆதரவுடன் இத்தாலி அதிபர் ஜியோர்ஜியா மெலோனி 6வது இடமும் பிடித்துள்ளனர்.

7வது இடத்தில் ஜோ பைடன்!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 41 சதவீதம் பெற்று 7வது இடமும், பெல்ஜியம் அதிபர் அலெக்சாண்டர் டி குரு 39 சதவீதம் பெற்று 8வது இடமும், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 39 சதவீதம் பெற்று 9வது இடமும் பிடித்துள்ளனர். மேலும், பட்டியலின்படி கடைசி இடமான 22வது இடத்தை தென்கொரிய அதிபர் யோன் சியோக் யோல் பெற்றுள்ளார். 

முதல்முறையல்ல…

பிரதமர் மோடி பிப்ரவரியில் 78 சதவீதத்தில் இருந்து 2 சதவீதம் குறைந்திருந்தாலும் பிரபலத்தின் அடிப்படையில் மற்ற உலகத் தலைவர்களை விட  முன்னிலையில்  உள்ளார். மேலும், பிரதமர் மோடி உலக அளவில் மிகவும் பிரபலமான தலைவராக இருப்பது, இது முதல் முறையல்ல என்பது குறிப்பிடத்தக்கது.