Tamil News
Tamil News
Wednesday, 05 Apr 2023 12:30 pm
Tamil News

Tamil News

தேரில் பவனி

கடந்த செவ்வாய்கிழமை அதாவது ஏப்ரல் 04-ம் தேதி திருவாரூர் மாவட்டத்திற்கு அரசு நிகழ்ச்சிகளுக்காக விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்றிருந்தார். திருவாரூர் சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ராஜ மரியாதையுடன் வரவேற்பு செய்திருந்தார்  சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் அவர்கள். குதிரை பூட்டிய தேரில் நகர்வலமாக சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

 முகம் சுளிக்கும் மக்கள்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு குதிரை பூட்டிய தேரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டாலும், அதுவே மக்கள் மத்தியில் முகம் சுளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சமூக நீதி பேசிக்கொண்டிருக்கக்கூடிய இவர்களே, மூத்த மாவட்ட செயலாளர் ஒருவர் வண்டி ஓட்ட, என்ன சாதித்து விட்டார் என்று வெகுசிலர் முகம் சுளிக்கின்றனர். அவர் கட்சியின் மாவட்ட செயலாளர் என்பதைவிட அவரும் ஒரு அடிமட்ட தொண்டன்தான். இந்த உணர்வில் தன்னை வளர்த்து ஆளாக்கிய கழகத்தின் ஒரு இளைஞனுக்கு அவர் விரும்பி செய்த கெளரவம். இது அடிமைத்தனம் அல்ல, அர்ஜூனனுக்கு தேர் ஓட்டியதால் கண்ணனின் ஆளுமையோ பெருமையோ மாறப்போவதில்லை எனவும் இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மோதிக்கொள்ளும் தொண்டர்கள்

மேலும், இந்த செயல் பற்றி முகம் சுளித்தும், கருத்து தெரிவித்தும் வரும்நிலையில், இன்னும் ஒருசிலர் அமைச்சர் உதயநிதி தேரில் பவனி சென்றதையும், எடப்பாடியின் பதவியை பெற்றது பற்றியும் ஒப்பிட்டு கருத்து மோதலில் இணையவாசிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதாவது, எடப்பாடி பழனிசாமி போல காலில் விழுந்து வாங்கிய பதவி அல்ல, இது கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி, அதனால் கொத்தடிமை பற்றி பேசுவதற்கு அதிமுகவினருக்கு அருகதையே இல்லை என்று அதிமுக - திமுக தொண்டர்கள் இணையத்தில் மோதிக்கொண்டுள்ளனர்.