Tamil News
Tamil News
Wednesday, 05 Apr 2023 12:30 pm
Tamil News

Tamil News

தமிழகத்தில் ஆவின் நிறுவனம் சார்பில் இ-மில்க் கார்டு திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் அறிவித்திருந்தநிலையில், அது பற்றி மக்கள் என்ன என்ன என்று கேட்டு வருகிறார்கள். 

இ-மில்க் - அமைச்சர் விளக்கம் 

நேற்றைய சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் பால்வளத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பதிலளித்து பேசிய பால்வளத்துறை அமைச்சர் நாசர் 48 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த அறிவிப்புகளில் 10-வது அறிவிப்பாக இந்த இ-மில்க் கார்டு திட்டத்தை அறிவித்திருந்தார். இந்த திட்டம் பற்றி விளக்கம் அளித்த அமைச்சர் நேரு;

டெக்னாலஜியும், நாகரீகமும் வளர்ந்த காலகட்டத்தில் நுகர்வோர்களின் நலன் கருதி அவர்களின் நேரத்தை வீணடிக்காமல் இருப்பதற்காக இந்த இ-மில்க் கார்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த இ-மில்க் கார்டு திட்டத்தில் நுகர்வோர்களுக்கு ஒரு அட்டையாள அட்டையானது வழங்கப்படும். அந்த அட்டையின் மூலம் நேரடி ஆன்லைன் பேஃமண்ட் மூலமாக பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்திருக்கிறார். இந்த இ-மில்க் அட்டையை ஆவின் இணையத்தில் விண்ணப்பித்து வாங்கிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார். 

முதற்கட்டமாக சென்னையில்..

மாதந்தோறும் நுகர்வோர் பணம் செலுத்தினால், பால், தயிர் மற்றும் உபபொருட்கள் முகவர்கள் மூலம் வீட்டுக்கே டெலிவரி செய்யப்படும். நுகர்வோர் எந்தச் சிரமமும் இல்லாமல் ஆவின் பால் பொருட்களை வாங்கும் வகையில் இ-மில்க் கார்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நுகர்வோருக்கான பொருட்கள் வணிகரீதியிலாக பயன்படுத்துவதைத் தடுக்க இந்த இ-மில்க் கார்டுகள் உதவும். இணையதளம் மூலம் ஆவின் பால் விற்பனை முதல் கட்டமாக சென்னை மற்றும் இதர மாநகரங்களில் அறிமுகம் செய்யப்படும் என்று பால்வளத் துறை அமைச்சர் நாசர் தெரிவித்திருக்கிறார்.