Tamil News
Tamil News
Thursday, 06 Apr 2023 00:00 am
Tamil News

Tamil News

தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றதிலிருந்தே அரசுக்கு எதிரான நிலைப்பாட்டையே எடுத்து வந்தார். குறிப்பாக, நீட் விலக்கு மசோதா, எழுவர் விடுதலை, ஆன்லைன் ரம்மி தடை உள்ளிட்ட மக்களுக்கு எதிரான திட்டங்களை சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைப்பார்கள். ஆனால், அதற்கு பதிலளிக்காமல் மசோதா மேல் ஏறி உட்கார்ந்து கொண்டு பதலளிக்காமல் இருந்து வருவதாக தோழமை கட்சிகள் கருத்து தெரிவித்து வந்தனர். இதனால், தமிழக அரசுக்கும், ஆளுநருக்கும் அவ்வப்போது மோதல்கள் ஏற்படும். இந்தநிலையில், தமிழக அரசு அனுப்பி வைக்கும் மசோதாக்களை நிராகரித்து வந்ததற்கான காரணத்தை வெளிப்படையாக பேசியிருக்கிறார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி.

போட்டுடைத்த ஆளுநர்

இந்திய குடிமைப்பணித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுடன் ஆளுநர் மாளிகையில் ஆர்.என்.ரவி கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், 'ஆளுநர் ஒரு தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்திருந்தால் அதற்கு நிராகரிப்பதாக பொருள்' என்று வெளிப்படையாக போட்டுடைத்திருக்கிறார். அரசியலமைப்பின்படி, அரசியலமைப்பை பாதுகாப்பதே ஆளுநரின் கடமை என்று தெரிவித்தார். தமிழகத்தில் ஆளுநருக்கு எதிராக, ஆட்டுக்கு தாடி எதற்கு; நாட்டுக்கு ஆளுநர் எதற்கு என்றும், ரம்மி ரவி என்றும், தமிழக அரசியலில் தலையிட அவர் யார் என்றும், தமிழக அரசியல் கட்சிகள் விமர்சித்து வந்தநிலையில், தற்போது அவர் இவற்றிற்கெல்லாம் சேர்த்து பதிலளித்திருக்கிறார்.

நாட்டின் வளர்ச்சிக்கு நிதி உதவிகள் இருந்துள்ளன

மேலும், நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக வெளிநாட்டு நிதி உதவிகள் இருந்துள்ளன என்றும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்தே நிதிகள் வந்துள்ளன என்றும் நாட்டின் பல பயங்கரவாத செயல்களுக்கு அந்த பணம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்திருக்கிறார். மேலும், தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் இருந்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்கு சென்றவர்களில் 90 நபர்களை இந்த அமைப்பு அனுப்பியுள்ளது என்றும் பேசினார்.

பணியாற்றுவது மகிழ்ச்சியாக இருக்கிறது

தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலை நாட்டின் 40% காப்பர் தேவையை பூர்த்தி செய்து வந்தது, இதனை வெளிநாட்டு நிதிகள் மூலம் மக்களை தூண்டிவிட்டு மூடி விட்டனர். ஸ்டெர்லைட் ஆலையின் போது நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது என்றும் பேசினார். தமிழ்நாடு அமைதியான மாநிலம் இங்கு பணியாற்றுவது மகிழ்ச்சியாக உள்ளது. தமிழ் மொழியின் தொன்மை, தமிழரின் கலாச்சாரம் மிகுந்த மகிழ்ச்சியையும் வரவேற்பையும் வழங்குகிறது என்று தெரிவித்தார்.