Tamil News
Tamil News
Friday, 07 Apr 2023 12:30 pm
Tamil News

Tamil News

தமிழ்நாட்டிற்கு வருகை தரும் பிரதமர் 

பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு இன்று வருகை தரவுள்ள நிலையில், சென்னை விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைக்க உள்ளார். அதைத்தொடர்ந்து சென்னை – கோவை ‘வந்தே பாரத்’ ரயில் சேவையை தொடங்கி வைக்கும் அவர் ரூ.3,700 கோடி  மதிப்புள்ள புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டு சென்னையில் 22 ஆயிரம்  காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தனி விமானம் மூலம் சென்னை வருகை

இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று பிற்பகல்  1.35 மணிக்கு ஹைதராபாத்தின் பேகம்பேட் விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் , சென்னை விமான நிலையத்திற்கு மதியம் 2.45 மணிக்கு வருகிறார். அங்கு  பிரதமரை ஆளுநர் ஆர்.என். ரவி. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  உள்ளிட்டோர் வரவேற்கின்றனர்.

மோடியை புறக்கணித்த தெலங்கானா முதல்வர்

இதனைத் தொடர்ந்து தெலங்கானா மாநிலத்திற்கு செல்லும் பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ரூ.11,360 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். இந்நிலையில், பிரதமர் மோடி பங்கேற்கு அரசு விழாவில் அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் புறகணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவுக்கு எதிராக மூன்றாவது அணியை அமைக்கும் முயற்சியில் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தீவிரம் காட்டி வரும் நிலையில், பிரதமர் விழாவை புறக்கணித்திருப்பது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.