Tamil News
Tamil News
Friday, 07 Apr 2023 12:30 pm
Tamil News

Tamil News

வந்தே பாரத் ரயில் சென்னையில் இருந்து 5 மணி 50 நிமிடங்களில் கோவையை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

40 நிமிடத்திற்கு முடிந்த முன் பதிவு 

தமிழ்நாட்டிற்கு வருகை தந்த பிரதமர் மோடி சென்னை மற்றும் கோயம்புத்தூர் இடையே இயங்கவிருக்கும் வந்தே பாரத் ரயில் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். இதனையொட்டி சென்னை - கோவை செல்லும் வந்தே பாரத் ரயிலுக்கு முன்பதிவு தொடங்கப்பட்டது. அதற்கான போர்டல் திறக்கப்பட்ட 30 முதல் 40 நிமிடங்களில் முன்பதிவு அனைத்து நிறைவுபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இணையதளம் மூலம் ரயில் சேவைக்கான முன்பதிவு நடைபெற்றதால், பெரும்பாலான மக்கள் தங்களது மொபைல் ஆப் மூலம் டிக்கெட்டுகளை பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த ரயில் சேவை ஏப்ரல் 9-ம் தேதி முதல் இயக்கப்படும்.

முதல் வகுப்பு இருக்கைக்கான டிக்கெட் ரூ.2,310

இந்த வந்தே பாரத் ரயில் சென்னையில் இருந்து 5 மணி 50 நிமிடங்களில் கோவையை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வந்தே பாரத் ரயிலின் குளிரூட்டப்பட்ட முதல் வகுப்பு இருக்கைக்கான டிக்கெட் ரூ.2,310 ஆகவும், இரண்டாம் வகுப்பு இருக்கைக்கான டிக்கெட் கட்டணம் ரூ.1,215 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. உணவு இல்லாமல் முதல் வகுப்பு இருக்கைக்கு ரூ.2,116 மற்றும் இரண்டாம் வகுப்பு இருக்கைக்கு ரூ.1,057 ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த ரயில் சென்னையில் இருந்து காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், திருப்பூர் வழியாக கோவைக்கு இரு திசைகளிலும் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் 450 இரண்டாம் வகுப்பு இருக்கைகளும், 56 முதல் வகுப்பு இருக்கைகளையும் கொண்டு, மொத்தம் 8 பேட்டிகள் இயக்கப்படுகிறது.