Tamil News
Tamil News
Monday, 10 Apr 2023 00:00 am
Tamil News

Tamil News

காங்கிரஸ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத் அண்மையில் அக்கட்சியிலிருந்து அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதோடு மட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தும் பாஜகவுக்கு ஆதரவாகவும் சமீப காலமாக கருத்து தெரிவித்து வருகிறார். கடந்த 50 வருங்களாக காங்கிரஸ் கட்சியில் பயணித்த குலாம் நபி ஆசாத் அக்கட்சியையே விமர்சிப்பது காங்கிரஸ் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

தொழிலதிபர்கள் குடும்பம்

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து விமர்சித்து வரும் குலாம் நபி ஆசாத் குறித்த கேள்விக்கு பதிலளித்த ராகுல்காந்தி, அவருக்கும் (குலாம் நபி ஆசாத்) அதானி குழுமத்திற்கும் தொடர்ப்பு இருப்பதாக கூறியிருந்தார். இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். அந்த நேர்காணலில் பேசிய குலாம் நபி ஆசாத், ராகுல் காந்தி மட்டுமல்ல அவரது குடும்பமே தொழிலதிபர்கள் குடும்பம். இந்தியாவிற்கு வெளியே விரும்பத்தகாத தொழிலதிபர்களை ராகுல் யாரை சந்தித்து வருவதற்கான 10 உதாரணங்களை என்னால் தர முடியும் என கூறினார். முன்னதாக அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பர்க் அதானி மீது ரூ.20,000 கோடி வரி ஏய்ப்பு புகார் குறித்து அறிக்கை வெளியிட்ட நிலையில், கருத்து கூறிய ராகுல் காந்தி காங்கிரஸில் இருந்து வெளியேறியவர்களுக்கும், புதிதாக பாஜகவில் சேர்ந்தவர்களுக்கும் இந்த வரி ஏய்ப்பு புகாரில் தொடர்பிருப்பதாக கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த ஆசாத், ராகுல் தலைமையிலான காங்கிரஸ் கட்சிக்கு தற்போது செல்வாக்கு இல்லை என்றும், காங்கிரஸில் இன்னும் ஒரு சிலரே எஞ்சியுள்ளதாகவும் கடுமையாக சாடினார். 

ராகுலுக்கு மக்கள் செல்வாக்கு இல்லை

தொடர்ந்து பேசிய அவர், ராகுல் மேற்கொண்ட இந்திய ஒற்றுமை பயணத்திற்கு பிறகு மக்கள் செல்வாக்கு அதிகரித்திருப்பதாக பலரும் கூறுகிறார். நான் அதை மறுக்கிறேன். சூரத் நீதிமன்றத்திற்கு நேரில் செல்லும் ராகுல் காந்தியுடன் ஒரு விவசாயியும், ஒரு இளைஞரும் கூட அவருடன் செல்லப் போவதில்லை. என கடுமையாக விமர்சித்துள்ளார்.