பேட்டரி வாகனங்களுக்கு 100 % வரி விலக்கு 

tn secretariat

2025 ஆம் ஆண்டு வரை விலக்கு

தமிழ்நாடு மின்சார வாகன கொள்கை 2019ன் படி பேட்டரி வாகனங்களுக்கு 100 சதவீத வரி விலக்கு அளிக்க தமிழ்நாடு போக்குவரத்து ஆணையரகம் கேட்டு கொண்டது. அதன்படி, 01.01.2023 முதல் 31.12.2025ம் ஆண்டு வரை பேட்டரியால் இயக்கப்படும் அனைத்து வாகனங்களுக்கும் வரி விலக்கு அளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பேட்டரியால் இயங்கும் 100 சதவீதம் வரி விலக்கு அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 

சுற்றுச்சூழல் பாதுகாப்பு

சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், பேட்டரி வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கவும் இந்த உத்தரவு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் பேட்டரி மூலம் இயக்கப்படும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கு 50 சதவீத வரி சலுகை வழங்க அரசாணை ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.