அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 அறிவித்தது தமிழ்நாடு அரசு..! 

Pongal Price

தைப்பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மற்றும் ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு. 

ரொக்கப் பணம் அறிவிப்பு

இன்று வெளியான தமிழ்நாடு செய்திக்குறிப்பில், “2023ம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப் பொங்கலை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் எடுக்கபப்ட்ட முடிவின்படி, வருகிற 2023ம் ஆண்டு தைப்பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி மற்றும் ரூ.1000 ரொக்கமாக வழங்கிட முடிவு செய்யட்டது. இதனால் அரசுக்கு 2.19 கோடி குடுமொப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள். இதன்மூலம் அரசுக்குச் சுமார் ரூ.2,356.67 கோடி செலவீனம் ஏற்படும். 

தமிழ்நாடு முதலமைச்சர் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வினை 02-01-2023 அன்று சென்னையில் முதலமைச்சரும், அன்றைய தினமே மாவட்டங்களில் அந்தந்த அமைச்சர் பெருமக்களும் தொடங்கி வைப்பார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டின் மோசமான அனுபவம்

கடந்த 2022ம் ஆண்டு பொங்கலுக்கு ரொக்க பணம் வழங்கப்படவில்லை, பரிசு தொகுப்பு மட்டுமே வழங்க முடிவு செய்யப்பட்டது. இது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் வழங்கப்பட்ட பரிசு பொருட்களின் தரம் சரியில்லை என பல புகார்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.