டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பவனில் தீ விபத்து.!

nehru

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பவனில் இன்று காலை 10:30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தின் தரை தளத்தில் தீப்பிடிக்க ஆரம்பித்தநிலையில், வேகமாக கட்டிடத்தின் மேல் தளம் வரை பரவியது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணங்களை போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மிகப்பெரிய அரசு அலுவலகமான ஜவஹர்லால் நேரு பவனில் குறிப்பிட்ட முக்கியமான துறைகள் இயங்கி வருகிறது. குறிப்பாக, வெளியுறவுத்துறை, நிதித்துறை, மற்றும் உள்துறை அமைச்சகம் உள்ளிட்ட துறைகள் இயங்கி வருகிறது. தீ விபத்தில் எந்தவிதமான உயிரிழப்புகளோ காயங்களோ யாருக்கும் ஏற்படவில்லை.   

இந்த ஜவஹர்லால் நேரு பவன் அரசின் முக்கியமான பகுதியாக இருந்து வருகிறது. ஜவஹர்லால் நேரு பவன் கூடிய விரைவில் மறுசீரமைக்கப்படும் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் மறு கட்டமைப்பு செய்ய எவ்வளவு காலம் ஆகும் என்பது பற்றியான தகவல் தெரிவிக்கவில்லை. 

மேலும், டெல்லியில் உள்ள அனைத்து அரசு கட்டிடங்களிலும் தீ பாதுகாப்பு மேற்பார்வையாளர் குழு அமைக்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறது. அந்த குழு அரசு கட்டிடத்தில் தீ விபத்துகள் ஏற்படும் என்று அறிந்து அதனை முன்கூட்டியே சரிசெய்ய உதவும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நிலைமையை சரி செய்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.