வரலாற்றுச் சிறப்புமிக்க மனித வடிவிலான கிராமம்.! 

website post (36)

சுற்றுலாத்துறையை வளப்படுத்தவும் பிற நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளை கவர்வதற்காகவும் ஏறத்தாழ அனைத்து நாடுகளும் பல சுற்றுலா தளங்களை கட்டமைத்து வருகின்றன. ஒவ்வொரு நாடுகளின் கட்டமைப்புகளும் கண்ணைக் கவரும் வகையிலான கட்டமைப்புகளை மேம்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் 16-ம் நூற்றாண்டிலேயே மனித வடிவில் கட்டமைக்கப்பட்டுள்ளது இத்தாலியில் அமைந்திருக்கும் சிசிலி நகரின் செஞ்சுரியே கிராமம்.

இந்த நகரம், சிமெண்ட் மற்றும் டிட்டினோ நதிகளுக்கு மத்தியில், கட்டானியாவின் வடமேற்கில் சுமார் 2402 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் என்னா மாகாணத்தைச் சேர்ந்த 5000 மக்கள் வசித்து வருகின்றனர். இந்நகரம் சுமார் 13-ம் நூற்றாண்டு முதல் பியூனிக் போரின் சமயத்தில் அஞ்சோவின் சார்லஸால் சூறையாடப்பட்டது. அதன்பின்பு, 16-ம் நூற்றாண்டில் அடெர்னோவின் பிரான்செஸ்கோ மொன்காடாவால் மீண்டும் கட்டப்பட்டது. மேலும், 1813 வரை அவரது சந்ததியினரால் ஒரு மாவட்டமாக ஆளப்பட்டது. இந்நகரத்தை கிரேக்க வரலாற்று ஆசிரியர் துசிடிடிஸ், ‘சிகுலியின் நகரம்’ அதாவது பண்டைய சிசிலியின் பழங்குடி என்று குறிப்பிடுகிறார். 

இந்த கிராமம் ஒரு மனிதன் தனது கை கால்களை விரித்து வைத்திருப்பது போன்ற வடிவில் அமைந்திருக்கிறது. தொல்லியல் துறையினருக்கு இத்தாலிய வரலாற்றை அறிந்து கொள்வதற்கு இவ்விடம் ஓர் மிகச்சிறந்த இடமாக கருதப்படுகிறது.

கிராமத்தின் மையத்திலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் ரோமன் மற்றும் சரசன் ஆகிய இரண்டு பழங்கால பாலங்கள் அமைந்துள்ளன. காண்ட்ராடா வாகினி என்ற இடத்தில் அமைந்திருக்கும் ‘ரோமன் பாத்ஸ்’, இன்னும் சில கிலோமீட்டர் தொலைவில் ரோமானிய அரசுக்கு முந்தைய காலகட்டத்தின் கடைசி நினைவுச் சின்னமான 'கொராடினோ கோட்டை' ஆகியவை இக்கிராமத்தின் பழமையினை பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளது. 

பழங்கால சின்னங்களை காண விரும்பும் பயணிகளுக்கு கட்டானியா பல்கலைக்கழகம் மற்றும் சூப்பர் இண்டெண்டென்ஸ் ஆப் சைராகுஸ் சேர்ந்து அமைத்த தொல்பொருள் அருங்காட்சியகம் அவ்விடத்தின் பழமையினை எடுத்துரைப்பது குறிப்பிடத்தக்கது.