தலைநகர் டெல்லியில் பிஜேபியை வீழ்த்திய ஆம் ஆத்மி

aravind kejrival

டெல்லி மாநிலத்தின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேர்தல் ஆணையத்தால் அண்மையில் அறிவிக்கப்பட்டது. மொத்தமுள்ள 250 வார்டுகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல், மத்திய அரசின் ஆளும் பிஜேபி கட்சிக்கும், மாநில அரசின் ஆம் ஆத்மி கட்சிக்கு இடையே பலத்த போட்டி நிலவி வந்தது. இதனால் இந்த இரு கட்சிகள் உட்பட பல்வேறு கட்சிகளும் தேர்தல் பரப்புரையில் அதிதீவிரம் காட்டி வந்தன. இந்நிலையில், அம்மாநிலத்தின் தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டு வருகின்றன. மதியம் 2 மணிவரை எந்த ஒரு கட்சியும் பெரும்பான்மையான இடங்களை பிடிக்காத நிலையில், 3 மணிக்கு மேல் தேர்தல் முடிவுகள் தலைகீழாக மறிப்போனது. 

தலைகீழாக மாறிப்போன தேர்தல் முடிவுகள்

இந்நிலையில், டெல்லி மாநிலத்தின் உள்ளாட்சி தேர்தலின் இறுதி  முடிவை தேர்தல் ஆணையத்தால் இன்று அறிவிக்கப்பட்டது. மொத்தமுள்ள 250 வார்டுகளில் 126 வார்டுகளை ஆத் ஆத்மி கட்சி கைப்பற்றியுள்ளது. 2 மணி வரை வெறும் 6 இடங்களில் முன்னிலைப் பெற்ற பிஜேபி இறுதியில் 97 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. கடந்த 15 ஆண்டுகளாக உள்ளாட்சியை தனது கைக்குள் வைத்திருந்த பிஜேபியின் சாதனை இத்தேர்தலின் மூலம் தகர்க்கப்பட்டது. முதல்முறையாக உள்ளாட்சியை தனது கைக்குள் கொண்டு வந்த ஆம் ஆத்மி கட்சியினர் தற்போது கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

நடனமாடவோ... பட்டாசு வெடிக்கவோ வேண்டாம்.. 

இந்நிலையில், ஆத் ஆம்தி கட்சியின் தலைவரும் டெல்லி மாநில முதல்வருமான அரவிந்த கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள அறிக்கையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி குறியுள்ளார், மேலும், தேர்தல் வெற்றியை அமைதியுடன் கொண்டாடவும், கட்சி அலுவலகங்களுக்கு தொண்டர்கள் வருவதை தவிர்க்கவும், அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், கட்சி அலுவலகத்திற்கு வெளியே நடனமாடுவதையும், பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்கவும் அவர் கேட்டுக்கொண்டார். இதனால் ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் ஒருவருக்கொருவர் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.