அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - நிர்மலா சீதாராமனுக்கு திமுக எம்.பி.கடிதம்

kalanithi veerasamy vs nirmala seetharaman

அண்ணாமலை மீது வழக்கு தொடுக்கும் திமுகவினர்

பாஜக மாநில தலைவரான அண்ணாமலை கடந்த சில தினங்களுக்கு முன்பு திமுக அமைச்சர்களின் சொத்து விவரங்களை வெளியிடுவதாக கூறி அண்மையில் பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தினார். இது திமுகவினர் மத்தியில் எதிர்ப்பை கிளப்பியது. இதன் காரணமாக பல்வேறு திமுக நிர்வாகிகள் அண்ணாமலை மீது வழக்க தொடுக்க போவதாக கூறியிருந்தனர். குறிப்பாக திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பியதை தொடர்ந்து இரு கட்சியினருக்கும் இடையே பல்வேறு பிரச்சனைகள் கிளம்பின. 

வருமான வரிச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை

இந்நிலையில், திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார். அதில், வருமான வரிச் சட்டத்தின் கீழ் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். மேலும், நண்பர்களிடமிருந்து மாதம் 7 முதல் 8 லட்சம் வரை வீட்டு செலவுகளுக்கு பணம் பெறுவதாக அவர் கூறியதன் அடிப்படையில், அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க கோரி கடிதம் அனுப்பியுள்ளார்.