இந்திய அளவில் பிரபலமான நடிகர்களில் நம்பர்-1 இடத்தை பிடித்த தமிழ் நடிகர்! 

Dhanush and Alia

இந்திய அளவில் பிரபலமான நடிகர்களின் பட்டி பிரபல IMD நிறுவனம் அறுவித்துள்ளது. 

IMD பட்டியல்

ஐ.எம்.டி. நிறுவனமானது இந்தியா மற்றும் உலகளவில் வெளியாகும் திரைப்படங்களை பார்த்து அதற்கு விமர்சனம் எழுதும் இணையதள நிறுவனம் ஆகும். மேலும், அந்த திரைப்படங்களுக்கு 1 முதல் 10 வரை மதிப்பெண்கள் வழங்குவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளது. ஐ.எம்.டி.யில் 7க்கு மேல் மதிப்பெண் பெற்ற திரைப்படங்கள் சிறந்த திரைப்படங்களாக ரசிகர்களால் பார்க்கப்படும். மேலும் ஒவ்வொரு வருடமும் பிரபலமான டாப் 10 நடிகர் நடிகைகளுக்கான தரவரிசைப்பட்டையலையும் வெளியிட்டுவருகிறது. 

தனுஷ் முதலிடம்

இந்நிலையில் 2022ம் ஆண்டிற்கான பிரபலமான நடிகர் நடிகைகளின் முதல் 10 பேருக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது ஐ.எம்.டி. அமைப்பு. இதில் கோலிவுட்டை சேர்ந்த நடிகர் தனுஷ் முதலிட்டத்தை பிடித்துள்ளார். நடிகர் தனுஷ் இந்த ஆண்டு, தமிழில் மாறன், திருசிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய திரைப்படங்களில் நடித்தார். இதில் திருசிற்றம்பலம் மற்றும் நானே வருவேன் ஆகிய திரைப்படங்கள் மாபெரும் வெற்றியடைந்தன. மேலும் இந்தியில் அந்தராங்கி ரே திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் ஹாலிவுட்டின் ரூஸோ பிரதர்ஸ் இயக்கி தயாரித்த தி கிரே மேன் (The Grey Man) திரைப்படத்தில் நடிகர் தனுஷ் நடித்திருந்தது அவரை இந்திய அளவில் மட்டும் இல்லாமல் உலகளவிலும் பிரபலமான நடிகராக உயர்த்தியது. 

நடிகர் தனுஷை தொடர்ந்து 2வது இடத்தில், நடிகை ஆலியா பட் உள்ளார். இவருக்கு இந்த ஆண்டு நான்கு படங்கள் வெளியாகியுள்ளது. அவை கங்குபாய் கத்வாடி, ஆர்.ஆர்.ஆர்., பிரமாஸ்திரா மற்றும் டார்லிங்ஸ் ஆகியவை ஆகும். இந்த நான்கு திரைப்படங்களுமே, விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

பொன்னியின் செல்வி

அதைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராய் மற்றும் ராம் சரண் ஆகியோர் 3 மற்றும் 4வது இடத்தில் உள்ளனர். மணிரத்தினம் இயக்கத்தில் பிரமாண்டமாக வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி எனற கதாப்பாத்திரத்தில் நடித்து, தனது நடிப்பாலும் அழகாலும் ஐஸ்வர்யா ராய் அனைவரையும் கவர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 4வது இடத்தில் உள்ள ராம் சரண் ராஜமௌலி இயக்கத்தில்ஆர்.ஆர்.ஆர். படத்தில் நடித்திருந்தார்.

ரசிகர்களின் மனதில் நீங்காமல் இருக்கும் சமந்தா  

இந்த பட்டியலின் ஐந்தாவது இடத்தில் நடிகை சமந்தா உள்ளார். தனிப்பட்ட விதத்தில் இவருக்கு இந்த ஆண்டு பல சோதனைகளை கொடுத்தாலும் ரசிகர்கள் தங்களது அன்பால் அவரை தொடர்ந்து காப்பாறி வருகின்றனர். இவர் நடித்த காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் யசோதா ஆகிய படங்கள் இந்த ஆண்டு வெளியாகி வெற்றியடைந்துள்ளது. 

விக்ரம் வேதா திரைப்படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்த ஹிருத்திக் ரோஷன் 6வது இடத்தில் உள்ளார். கிய்ரா அத்வானி 7 வது இடத்திலும், ஜூனியர் என்.டி.ஆர். 8வது இடத்திலும், அல்லு அர்ஜூன் 9வது மற்றும் கன்னட நடிகர் யாஷ் 10வது இடத்திலும் உள்ளனர் என ஐ.எம்.டி. தெரிவித்துள்ளது.