நடிகர் சிவாஜியின் பெட்ரூம் சீக்ரெட்..!

Sivaji and Aarur doss

சிவாஜியின் பெட்ரூம்

சிவாஜியின் அன்னை இல்லத்தின் மாடியில் உள்ள அவருடைய படுக்கை அறையில் கட்டில் தலையணைகளுக்கு மேலே எழுந்து நின்றால் கைக்கு எட்டுகிறாற்போல ஒரு பெரிய பரங்கிக்காய் சைசில் பிரம்புக்கூடை ஒன்று எப்போதும் தொங்கிக் கொண்டிருக்கும். 

அது கண்டிப்பாக லைட் இல்லை. பிறகு அது எதற்காக? அதைப்பற்றி சிவாஜியிடம் ஆரூர் தாஸ் கேட்டதே இல்லை. நமக்கு எதற்கு என்று அதைக் கண்டுகொள்ளாமல் இருந்து விட்டார். ஆனாலும் அந்த மர்மப் பிரம்புக்கூடை அவர் மனதை உறுதிக்கொண்டே இருந்தது. ஒருநான் சிவாஜி என்ன நினைத்தாலும் சரி என்று துணிந்து கேட்டுவிட்டார் ஆரூர்தாஸ். 

சிவாஜியிடம் ஆரூர் தாஸ் கேட்ட கேள்வி

அண்ணே! நானும் ரொம்ப நாளா உங்க பெட்ரூமுக்கு வரும்போதெல்லாம் கவனிக்கிறேன், அதோ மேலே தொங்குதே அந்த பிரவுன் கலர் பிரம்புக்கூடை, அது எதுக்காக? என்று ஒரு வழியாக கேட்டுவிட்டார் ஆரூர் தாஸ். அவசியம் நீ தெரிஞ்சிக்கணுமா? என்று வந்தது சிவாஜியின் பதில். ஆமா, இல்லேன்னா என் தலையே வெடிச்சிடும் போலிருக்கு. வேண்டாம் வேண்டாம்! உன் தலை விலை மதிப்பானது. சரி, எழுந்திரு. இப்படி வா. கட்டில் மேலே ஏறி நின்னு உன் கையை அந்தக் கூடைக்குள்ளே விட்டுப்பாரு. அதுல ஒரு கருநாகம் இருக்கு என்றார் சிவாஜி . ஐயையோ! அப்படின்னா வேண்டாம். பயப்படாதே. ஒண்ணும் ஆகாது, வா. என்று ஆரூர் தாசை அழைத்தார் சிவாஜி. 

கூடைக்குள் இருந்த கருநாகம்? 

ஆரூர் தாஸ் கட்டில் மேலே ஏறி நின்றார். கையை உள்ளே விட்டு துழாவினர். ஒரு பொருள் மீது அவரது விரல்கள் பட்டன. புரிந்து கொண்டார். அண்ணே! தெரிஞ்சிக்கிட்டேன், என்றார் ஆரூர் தாஸ். அதை வெளியில் எடு என்றார் சிவாஜி. நீங்க சொன்ன கருநாகம் கடிச்சா உயிர் போயிடும். இது ரிவால்வர், இது  வெடிச்சா ஆல் அவுட்டு என்றார் ஆரூர் தாஸ் சற்று வியப்புடன்! உன்னே வச்சிட்டு கீழே இறங்கு என்று சிவாஜியின் கட்டளை வந்தது.

அண்ணே, ரிவால்வரை தலைகாணிக்குக்கீழே, இல்லேன்னா மெத்தைக்கு அடியிலதானே வைக்குறது வழக்கம். நீங்க ஏன் கூடைக்குள்ளே வச்சு மேலே தொங்க விட்டிருக்கீங்க என்று ஆரூர் தாஸ் கேட்க. அதுல ஏற்கனவே குண்டு போட்டிருக்கு. தலைகாணிக்கு கீழே வச்சு, அம்மா இல்லேன்னா வேற யாரோட கையாவது தவறுதலா அதுல பட்டுட்டா வெடிச்சிடும் இல்லியா? அதனால்தான் மேல பெட்டிக்குள்ள வச்சிருக்கேன்.

சமயத்துல என் பாதுகாப்புக்காகத் தேவைன்னு லைசன்சோட வாங்கியபிருக்கிற அந்த ரிவால்வரை அங்கே பாதுகாப்பா வச்சிருக்கேன். இது நம்ம டி.ஐ.ஜி பரமகுரு இருக்கார்ல அவரு சொன்ன ஐடியா. எப்படி? என்று அந்த துபாக்கியின் பின்னணியை பற்றி விலகினார் சிவாஜி. 

சிவாஜிக்கு ஆரூர்தாஸின் ஆலோசனை 

அண்ணே! சொல்லுறேன்னு தப்பா நினைக்க மாட்டீங்களே. நான் எப்போ உள்னைத் தப்பா நினைச்சிருக்கேன்? என்ன சொல்லு, என்றார் சிவாஜி. அது விளையாட்டுப் பொருள் இல்லே, உயிரைக் குடிக்கக்கூடிய ஒரு கொடிய ஆயுதம், அதைத் தலைக்கு மேலே தொங்கவிட்டுக்கிட்டு ராத்திரி படுக்கும்போதும், பொழுது விடிஞ்சி கண் விழிக்கும்போதும் மத்த நேரங்கள்ளேயும் சதா அதைப்பார்க்கிறது சென்டிமென்டலா நல்லவா இருக்கு? காலையில் கண் விழிக்கும்போது முதல் முதல்ல கணவன் மனைவி முகத்துலேயும், மனைவி கணவன் முகத்துலேயும், இல்லென்னா கண்ணாடியைப் பார்த்தும் விழிக்கணும்னு நம்ம பெரியவங்க சொல்லி வச்சிருக்காங்க. 

நீங்க தினமும் ஒரு கொலை ஆயுதத்தைப் பார்த்துக்கிட்டு கண் விழிக்கிறீங்களே. அது சரின்னு என் மனசுக்குத் படல. அதை எடுத்து பீரோக்குள்ளே மறைவா வைங்க. எனக்குத் மனசுக்கு பட்டத  சொல்லிட்டேன். அப்புறம் உங்க இஷ்டம் என்றார் ஆரூர் தாஸ்.
நீ சொல்றது ரொம்ப கரைக்ட், ஆரூரான். இவ்வளவு நாளா எனக்கு அது தோணலே.

டி.ஐ.ஜி. பரமகுரு சொன்னதா நீங்க சொல்றீங்க. இப்போ நான் உங்களுக்கு ஒன்னு சொல்றேன். இது திருமகள் வாசம் பண்ற வீடு, திருடன்களை அடைச்சி வைக்கிற போலீஸ் ஸ்டேஷன் இல்லே. போலீஸ்காரங்களுக்கு எப்போமே நோ சென்டிமென்ட்ஸ்.
சாஸ்திர சம்பிரதாயமெல்லாம் அவுங்களுக்குக் கிடையாது. அவுங்களுக்கு சட்டம் தான் முக்கியம். பந்தபாசத்துக்கெல்லாம் அப்பாற்பட்டவுங்க அவுங்க. சம்சாரத்தை விட சட்டம்தான் அவுங்களுக்கு முக்கியம்.

குற்றவாளிங்க, கொலைகாரங்க, கொள்ளைக்காரங்களோடதான் அவுங்க வாழ்க்கையே. அவுங்களைச் சுத்தி இருக்குற கடமைங்குற இரும்பு வளையத்துக்குள்ளே இருக்குறவங்க அவுங்க. ஆனா நம்ம வாழ்க்கை அப்படி இல்லே. முதல்ல அதைத் தெரிஞ்சுக்குங்க என்றார் ஆரூர் தாஸ். அதை கேட்டு சற்று கண் கலங்கிய சிவாஜி, ஆரூரான், நீ இப்போ பேசுனது எழுதுன வசனம் மாத்ரி இருக்கு! எதாவது போலீஸ் கதைல இதை எழுது, நல்லாருக்கும். ஏதேதோ சொல்லி என்னை யோசிக்கவச்சிட்டே. கமலாம்மா கிட்டே அதை எடுத்து நீ சொன்னபடி பீரோக்குள்ளே மறைவா வைக்கச் சொல்றேன். தேங்க்யூ பார் யுவர் அட்வைஸ்.

அண்ணே! நான் ஒண்ணும் பெரிய மகரிஷி இல்லே அட்வைஸ் பண்றதுக்கு. நான் ஒரு அலாரக்கடிகாரம், தேவையானப்போ என் மூளைங்குற முள்ளைத் திருப்பி வச்சு சாவி கொடுப்பேன். அது சரியா மணி அடிக்கும். அவ்வளவுதான்! இதன் பிறகு அந்தப் பிரம்புக்கூடையும் அந்த ரீவோல்வரும் சிவாஜி எங்கே வைத்தார், என்ன செய்தார் என்று ஆரூர் தாசுக்கு தெரியவில்லை, அவரும் அதை பற்றி மீண்டும் சிவாஜியிடம் கேட்கவில்லை.