நடிகை வழக்கு.. ஏன் ஆஜராகவில்லை.. காரணம் சொன்ன சீமான்.!

ajar

நடிகை விஜயலட்சுமி தொடுத்த வழக்கு ஆவணங்களை தனக்கு அளித்தால் மட்டுமே போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு தர முடியும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விளக்கம் அளித்திருக்கிறார்.   

நடிகை விஜயலட்சுமி புகார்

தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி மோசடி செய்ததாக நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் அளித்திருந்தார். அதனடிப்படையில், அந்தப் புகார் குறித்து செப்-09 வளசரவாக்கம் காவல்நிலையத்தில் வந்து விளக்கமளிக்க வேண்டுமென்று சீமானுக்கு காவல்துறை சம்மன் அனுப்பியது. ஆனால், அன்றைய தினம் ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது அருந்ததிய மக்களை இழிவாக பேசியதாக சீமான் மீது வழக்கு போடப்பட்டது. அந்த வழக்கில் அன்றைய தினம் ஈரோட்டில் ஆஜராக வேண்டியிருந்ததால், இந்த வழக்கில் ஆஜராக முடியவில்லை என்றும், வேறொரு தேதியில் வந்து ஆஜராகிறேன் என்று சீமான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

காவல்துறை சம்மன்

இந்தநிலையில், நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் வழக்கில் ஆஜராக இன்றைய தினத்தில் சீமானுக்கு காவல்துறை சம்மன் அனுப்பியது. அந்தவகையில், சீமான் இன்று ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சீமான் ஆஜராகமல் அவருடைய வழக்கறிஞர்கள், வளசரவாக்கம் காவல்நிலையத்தில் ஆஜராகி காவல் ஆணையரிடம் விளக்கம் அளித்தனர்.

ஏன் ஆஜராகவில்லை.. சீமான் விளக்கம்

இந்தநிலையில், தான் ஏன் ஆஜராகவில்லை என்பதற்கான காரணத்தை காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட கடிதத்தில் உள்ள தகவல் வெளியாகி இருக்கிறது. அதில், ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட நிகழ்ச்சிகள், வேறு ஒரு அரசியல் வழக்கில், ஆஜராக வேண்டி உள்ளதால் தற்போது ஆஜராக இயலவில்லை என்றும், நியாயமான மற்றும் நேர்மையான விசாரணை நடைபெற ஆவணங்களின் நகலை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், வழக்கு சம்பந்தமாக தன் சார்பில் தாங்கள் முன், ஆஜராக எனது வழக்கறிஞர்களுக்கு அதிகாரம் அளித்துள்ளேன் என்றும், வழக்கு ஆவணங்களை தனக்கு அளித்தால் மட்டுமே போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு தர முடியும் என்றும், ஆவணங்கள் தரப்படாமல் விசாரணைக்கு தான் ஆஜராவது எந்த பலனையும் அளிக்காது என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.