அடிக் அஹமது கொலையாளிகளும்  கோட்சே போலத் தான். - ஓவைசியின் பேச்சால் சர்ச்சை

owaisi

பத்திரிக்கையாளர் சந்திப்பில் கொல்லப்பட்ட பிரபல தாதா

உத்தரபிரதேசத்தை சேர்ந்த பிரபல தாதாவான அடிக் அஹமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரஃப் ஆகீயோர் மீது பல்வேறு வழக்குகள் சுமத்தப்பட்ட நிலையில், காவல்துறையினரின் பாதுகாப்போடு மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது அவரை சூழ்ந்த பத்திரிக்கையாளர்கள் அடிக் அஹமதுவிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அடிக் அஹமது பதிலளித்து கொண்டிருக்கும்போதே, கூட்டத்தின் இருந்த இருவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில், அடிக் அஹமதுவும், அவரது சகோதரர் அஷ்ரஃபும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் துப்பாக்கி சூட்டிற்கு ஆதரவாகவே தனது கருத்து பதிவு செய்திருந்தார். 

கோட்சேவின் பாதையை பின்பற்றுக்கின்றனர்

இந்நிலையில், தெலங்கானா நாடாளுமன்ற உறுப்பினர் ஒவைசி பாஜக அரசின் செயல்பாடுகளை கண்டித்து பொதுக்கூட்ட மேடையில் கேள்விகளை எழுப்பினார்.  அப்போது அவர் பேசியதாவது, துப்பாக்கி சூடு நடத்த அவர்களுக்கு ஊக்கம் கொடுத்தது யார்..? குற்றவாளி என நீதிமன்றம் கூறி காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்படும்போது, கொலை செய்யப்பட்டிருப்பது நாட்டின் பாதுகாப்பின்மையை கேள்விக்குள்ளாகுகிறது. அங்கே இருந்த காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தும் பயங்கராவாதிகள் மீது எதிர் தாக்குதல் நடத்தாமல் இருந்தது ஏன்..? பயங்கரவாதிகளுக்கு ரூ.8 லட்சம் மதிப்பிலான ஆயுதங்களை கொடுத்தது யார்.? எனவே இந்த சம்பவம் காவல்துறை மற்றும் அம்மாநில அரசாங்கத்தின் மீது இருக்கும் நம்பகத்தன்மையை இழக்க செய்கிறது. இந்த சம்பவம் மூலம் கோட்சேவின் பாதையை அவர்கள் பின்பற்றுகின்றனர் என்பது நன்றாக தெரிகிறது. இவ்வாறு அவர் பேசினார்.