அதிமுக பேரணி.. ஆளுநரிடம் புகார் மனு.. திக்குமுக்காடும் திமுக.!

admk vs dmk

அதிமுக பேரணி.. ஸ்தம்பித்த மக்கள் 

ஆளும் திமுக அரசின் சட்டம் ஒழுங்கு பிரச்னை, விஷச்சாராய மரணம் உள்ளிட்ட சம்பவங்கள் குறித்து ஆளுநரிடம் புகார் மனு அளிப்பதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சின்னமலையில் இருந்து அதிமுகவினர் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக சென்றனர். பேரணியில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். இதனால், கிண்டி, வேளச்சேரி பகுதிகளில் போக்குவரத்து நெரிசலில் மக்கள் ஸ்தம்பித்தனர். 

ஆளுநரிடம் புகார் மனு

கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் உள்ள ஆளுநரை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், வேலுமணி, தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் சந்தித்து திமுக மீதான புகார் மனுவை அளித்தனர். புகார் மனுவில், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச் சாராயத்தால் உயிரிழந்த சம்பவம் மற்றும் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு குறித்தான புகார் மனுவை அளித்துள்ளனர். 

அண்ணாமலை புகார் மனு 

ஏற்கனவே, நேற்றைய தினம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து திமுக அரசு மீது புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதிலும், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு பிரச்னை, விஷச்சாராய மரணம் உள்ளிட்ட புகார்களை தெரிவித்திருந்தார். மேலும், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அதற்கான அதிகாரம் ஆளுநருக்கு இருக்கிறது என்றும் புகார் தெரிவித்திருந்தார். 

திமுக எவ்வாறு மீளப்போகிறது

இந்தநிலையில், இன்று அதிமுக சார்பில் பேரணியாக சென்று திமுக அரசு மீது புகார் மனு அளித்திருப்பது திமுகவிற்கு பெரும் நெருக்கடியை கொடுத்துள்ளது. திமுக அரசு தொடர்ந்து மது தொடர்பான விஷயங்களில் பின்னடைவை சந்தித்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் இருந்து திமுக எவ்வாறு மீளப்போகிறது என்பதை வரும்கால அரசியல் நடவடிக்கைகள் மூலம் பார்க்கலாம்.