தமிழகம் வரும் அமித்ஷா.. சந்திக்க திட்டம் தீட்டிய ஓபிஎஸ் இபிஎஸ்.! 2024 Plan.?

amitshhasfs

இரண்டு நாள் பயணமாக நாளை சென்னை வரும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் சந்திக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  

பாஜக சாதனைவிளக்க பொதுக்கூட்டம்

பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிப்பொறுப்பேற்று 9 ஆண்டுகள் நிறைவடைந்தநிலையில், இந்தியா முழுவதும் பாஜக அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் ஒவ்வொரு மாநிலங்களிலும் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், தமிழ்நாட்டிலும் பொதுக்கூட்டத்தை நடத்த இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகின. அதனடிப்படையில், வரும் 11-ம் தேதி வேலூர் மாவட்டம் கந்தநேரியில் பாஜகவின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. 

அமித்ஷா பங்கேற்பு 

இதையடுத்து, சாதனை விளக்க பொதுக்கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தர இருக்கிறார். பாஜக அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ள அமித்ஷா பாஜக அரசின் 9 ஆண்டு சாதனைகளை மக்களிடம் எடுத்துரைக்க உள்ளார். 

சந்திக்க திட்டம் தீட்டிய ஓபிஎஸ் இபிஎஸ்

இந்தநிலையில், இரண்டு நாள் பயணமாக நாளை சென்னை வரும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் சந்திக்க திட்டமிட்டுள்ளனர். நேரம் ஒதுக்கப்பட்டால் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சந்திப்பு நடைபெற வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சந்திப்பில், நாடாளுமன்ற தேர்தலில் பாஜக போட்டியிடும் தொகுதிகளை முன்கூட்டியே இறுதி செய்வது குறித்து பேசப்பட உள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்து அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. 

அமித்ஷா ஆலோசனை

இதையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓபிஎஸ் மற்றும் டிடிவி சந்தித்து பேசிய நிலையில், ஓபிஎஸும் உள்துறை அமைச்சரை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 2 நாள் பயணமாக நாளை சென்னை வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சென்னையில் உள்ள பள்ளிக்கரணையில் வரும் 11-ம் தேதி பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த இருக்கிறார். 

2024 Plan?

கடந்த மாதம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பேசினர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதலை உள்துறை அமைச்சர் முன்னிலையில் சமரசம் செய்து கொண்டனர். இதையடுத்து, வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து முன்னக்கூடியே அறிவிக்க வேண்டும் என்று பாஜக கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. இதை மையப்படுத்தி எடப்பாடி பழனிசாமி அமித்ஷா சந்திப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

இந்தநிலையில், 2024 மக்களவை தேர்தலில் தமிழகத்தில் 9 எம்.பி. தொகுதிகளில் போட்டியிட பாஜக விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, தென்சென்னை, வேலூர், கோவை, நெல்லை, நீலகிரி, திருப்பூர், விருதுநகர், விழுப்புரம் உள்ளிட்ட 9 தொகுதிகளில் போட்டியிடலாம் என தகவல் சொல்லப்படுகிறது. அதை முன்வைத்தே தென்சென்னை மற்றும் வேலூருக்கு அமித்ஷா வரவுள்ளதாக பாஜக வட்டாரம் தெரிவிக்கின்றன.