அதிமுகவினரை அமித்ஷா சந்திக்கவில்லை.. பின்னணி என்ன? 

aeo

இன்று சென்னை வரும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஓபிஎஸ் இபிஎஸ் சந்திக்க இருப்பதாக நேற்று தகவல் வெளியானநிலையில், தற்போது அதிமுகவினரை அமித்ஷா சந்திக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.   

பாஜக சாதனை விளக்க பொதுக்கூட்டம்

பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிப்பொறுப்பேற்று 9 ஆண்டுகள் நிறைவடைந்தநிலையில், இந்தியா முழுவதும் பாஜக அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் ஒவ்வொரு மாநிலங்களிலும் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், தமிழ்நாட்டிலும் பொதுக்கூட்டத்தை நடத்த இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகின. அதனடிப்படையில், நாளை 11-ம் தேதி வேலூர் மாவட்டம் கந்தநேரியில் பாஜகவின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. 

இதையடுத்து, சாதனை விளக்க பொதுக்கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று இரவு சென்னை வருகை தர இருக்கிறார். பாஜக அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ள அமித்ஷா பாஜக அரசின் 9 ஆண்டு சாதனைகளை மக்களிடம் எடுத்துரைக்க உள்ளார். 

ஓபிஎஸ் இபிஎஸ் அமித்ஷாவை சந்திக்க இருப்பதாக தகவல் 

இந்தநிலையில், சென்னை வரும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் சந்திக்க இருப்பதாக நேற்றைய தகவல் வெளியாகின. நேரம் ஒதுக்கப்பட்டால் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சந்திப்பு நடைபெற வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியானது. சந்திப்பில், நாடாளுமன்ற தேர்தலில் பாஜக போட்டியிடும் தொகுதிகளை முன்கூட்டியே இறுதி செய்வது குறித்து பேசப்பட உள்ளதாகவும், தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்து அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசிக்கவுள்ளதாகவும் சொல்லப்பட்டது0. 

இதையடுத்து, ஓபிஎஸும் உள்துறை அமைச்சரை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாக தகவல் வெளியானது. இன்று இரவு சென்னை வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாளை காலையில் அதாவது, ஜூன் 11-ம் தேதி தென்சென்னை பகுதி நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியது. 

அதிமுகவினரை அமித்ஷா சந்திக்கவில்லை

இந்தநிலையில், சென்னை வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அதிமுக இடையே சந்திப்பு நடைபெறாது என தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவருடைய சொந்த ஊரில் முழங்கால் சிகிச்சை பெற்று வருவதால், அமித்ஷாவை சந்திக்க இதுவரை நேரம் கேட்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், ஓபிஎஸுக்கும் இதுவரை நேரம் ஒதுக்கவில்லை என தகவல் சொல்லப்படுகிறது. அதிமுக சார்பில் இரண்டாம் கட்ட தலைவர்களும் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. 

இன்று இரவு சென்னை வரும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, கிண்டியில் உள்ள ஐடிசி சோழா ஹோட்டலில் தங்குகிறார். பின்னர், ஞாயிற்றுக்கிழமை காலை சென்னை கோவிலம்பாக்கத்தில் உள்ள ஒரு மஹாலில் மக்களவை தேர்தலுக்கான ஆலோசனைகளை பாஜக நிர்வாகிகளுடன் சந்தித்து பேச இருக்கிறார். பின்னர், அங்கிருந்து மதியம் வேலூர் புறப்பட்டுச் சென்று சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். உடன் மத்திய அமைச்சர் வி.கே.சிங், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்க இருக்கின்றனர். பொதுக்கூட்டம் முடிந்த பிறகு அங்கிருந்து விமானம் மூலம் விசாகப்பட்டினம் செல்கிறார்.