அமமுக சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டம்: நிர்வாகிகள் பங்கேற்பு

ammk meeting

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர், டிடிவி.தினகரன் ஆணைக்கிணங்க திருச்சி மாநகர் மாவட்ட சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்டச் செயலாளரும், திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினருமான செந்தில்நாதன் இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். திருச்சி மேற்கு பொதுக்குழு உறுப்பினர் வேதராஜன் தலைமை வகித்தார். தொழிற்சங்க பேரவை இணைச் செயலாளர் டோல்கேட் கதிரவன், பொதுக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி ஆகியோரது முன்னிலை வகித்தனர். திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்புரையாற்றினர்.