அரசியல் தெரியாத அனுபவமற்ற அரசியல்வாதி அண்ணாமலை - டிடிவி தினகரன் 

ttv vs annamalai

அண்ணாமலையின் சர்ச்சைக் கருத்து

ஆங்கில ஊடகத்திற்கு சமீபத்தில் பேட்டியளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து விமர்சித்திருந்தார். அதில், முன்னாள் முதலமைச்சர் ஊழல் குற்றத்திற்காக தண்டனை பெற்றவர் என்றும், இதனால் தான் தமிழ்நாடு ஊழல் நிறைந்த மாநிலமாக இருப்பதாக கூறியிருந்தார். அண்ணாமலையின் இந்த கருத்து அதிமுகவினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அண்ணாமலையின் அறியாமை

இந்நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அண்ணாமலையின் பேச்சு தமிழக அரசியல் வரலாறு தெரியாத அனுபவமற்றா அரசியல்வாதியின் பேச்சு என கடுமையாக சாடியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியல் அறிவு ஏதுமின்றி புரட்சித்தலைவி அம்மா அவர்களைப் பற்றி திரு. அண்ணாமலை டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கையில் வெளிப்படுத்திய கருத்து அவரது அறியாமையையும், அனுபவமற்ற தனத்தையும் வெளிக்காட்டுகிறது. 1996 ல் எதிர்க்கட்சிகளின் பொய் பிரச்சாரத்தாலும், அவர்கள் ஏற்படுத்திய கடும் நெருக்கடிகளையும் தாண்டி பீனிக்ஸ் பறவையை போல் எழுந்து வந்தவர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். 

உலக அரசியலை திரும்பி பார்க்க வைத்தவர் அம்மா

முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் அவர்கள் அம்மா அவர்களின் ஆளுமையை பற்றி மெரினா கடற்கரையில் புகழ்ந்து பேசியதை உலகம் கேட்டது.  பாஜகவின் வெற்றி வாய்ப்புகளை தமிழகத்தில் ஏற்படுத்தி கொடுத்தவர் புரட்சித் தலைவி அம்மா மட்டுமே. இந்த வரலாறை அண்ணாமலை தெரிந்திருப்பாரா..? எத்தனையோ குற்றச்சாட்டுகளையும் பொய் வழக்குகளையும், அவர் மீது எதிர்க் கட்சிகள் வாரி இறைத்தபோதும், தமிழகத்தை ஆளுகின்ற பொறுப்பு தமிழக மக்களால், இதயதெய்வம் அம்மா அவர்களிடம் வழங்கப்பட்டது. இந்த காலகட்டத்திலும் இந்திய அளாவில் தமிழகம் பல துறைகளில் அடைந்திருக்கக் கூடிய வளர்ச்சிக்கு முக்கிய காரணம் அம்மா அவர்களே என்பதை திரு. அண்ணாமலை புரிந்து கொள்ள வேண்டும். உலக அரசியலையே திரும்பி பார்க்க வைத்தவர் இதய தெய்வம் அம்மா அவர்கள். இவை எதையும் உணராமல் அரசியல் பக்குவமின்றி திரு.அண்ணாமலை பேசி வருவது கடும் கண்டனத்திற்குரியது. என டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.