ஆஸ்திரேலியாவை சுருட்டிய இந்திய அணி..! 

India Team

ஆஸ்திரேலியாவை இந்திய கிரிக்கெட் அணி முதல் டெஸ்ட் போட்டில்யின் முதல் இன்னிங்சில் குறைந்த ரன்களில் சுருட்டியுள்ளது. 

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டி இன்று நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் அஸோசியேசன் மைதானத்தில் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இன்று டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, முதலில் பேட் செய்யத் தொடங்கியது. 

முதல் கோணல்

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் சார்பாக, டேவிட் வார்னர் மற்றும் உஸ்மான் கவாஹா ஆகியோர் இறங்கினர். இந்திய அணி சார்பில் முதல் ஓவரை முகமது ஷமி வீசினார். மொத்தம் 5 பந்துகளுக்கு ஒரு ரன் மட்டுமே எடுத்து டேவிட் வார்னர் போல்ட் ஆக, இட்ரண்டாவது ஓவரில் வெறும் 3 பந்துகளுக்கு ஒரு ரன் மட்டுமே எடுத்து, முகமது சிராஜ் ஓவரில் உஸ்மான் எல்.பி.டபூல்யூ முறையில் ஆட்டமிழந்தார். பின்னர் 3வது மற்றும் நான்கவது விக்கெட்டிற்கு களம்மிறங்கிய மர்னுஸ் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் டெஸ்ட் போட்டிக்கேற்ற பொறுமையான ஆட்டத்தை ஆடினர். இதில் 123 பந்துகளுக்கு 49 ரன்களில் மர்னுசும், 107 பந்துகளுக்கு 37 ரன்களில்  ஸ்டீவ் ஸ்மித்தும் ரவீந்திர ஜடேஜாவின் சுழலில் சிக்கி ஆட்டமிழந்தனர். 

ரவீந்திர ஜடேஜா அபாரம்

இந்திய அணி சார்பில் ரவீந்திர ஜடேஜா, 22 ஓவர்கள் வீசி 47 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார். அதைப்போல ரவிச்சந்திரன் அஸ்வின் 15.5 ஓவர்களை வீசி 42 ரன்களை விட்டுக்கொடுத்து, 3 விக்கெட்களை வீழ்த்தினார். முகமது ஷமி மற்றும் முகமது ஷிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்களை வீழ்த்தினர். இதனால் முதல் இன்னிங்ஸில்  மொத்தம் 177 ரன்களுக்கு 10 விக்கெட்களையும் இழந்து ஆஸ்திரேலிய அணி ஆட்டமிழந்தது. 

இந்திய அணி பேட்டிங்

இந்திய அணி சார்பில் ரோஹித் சர்மா மற்றும் புது மாப்பிள்ளை கே.எல்.ராகுல் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி ஆடிவருகின்றனர். ரோஹித் 12 பந்துகளுக்கு 15 ரன்களும், ராகுல் 7 பந்துகளுக்கு ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.