ஸ்ரீரங்கம் கோயிலில் பிளாஸ்டிக் தடை குறித்து பக்தர்களுக்கு விழிப்புணர்வு 

srirangam temple

முக்கிய ஆன்மீக தலம் 

தமிழ்நாட்டின் முக்கியமான ஆன்மீக சுற்றுலாத் தலமாக திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் விளங்கி வருகிறது. இக்கோவிலுக்கு தமிழ்நாட்டில் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வருகை தந்து தங்களது வேண்டுகல்களை நிறைவேற்றி வருகின்றனர். இந்நிலையில், திருக்கோயிலுன் சுற்று சூழல் பாதுகாப்பிற்காக பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. 

பக்தர்களுக்கு விழிப்புணர்வு

அதன்படி, திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சி தலைவர் திரு மா.பிரதீப் குமார் அவர்களின் அறிவுரையின்படி தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் திருச்சிராப்பள்ளி   சார்பாக ஸ்ரீரங்கம் திருக்கோயில் வளாகத்தில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக் கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது குறித்து பக்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோயில் இணை ஆணையர் திரு செ. மாரிமுத்து , திருச்சி மாவட்ட  தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சுற்றுச்சூழல் பொறியாளர் திருமதிசா.சிவரஞ்சனி ஆகிேயார் பக்தர்களுக்கு மஞ்சள் துணிப்பை மற்றும்  விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை வழங்கினர். இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட மாசுகட்டுபாடு வாரிய ,உதவி பொறியாளர் திரு ச.கிருஷ்ண பிரசாத், கோயில் மேலாளர் திருமதி கு.தமிழ்செல்வி, உதவி செயற்பொறியாளர் திரு சீ.அசோகன் ஆகியோர் உடன் இருந்தனர், முன்னதாக அனைவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.