B to the A to the B to the A… BABA.. ரீ - ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Baba

சூப்பர்ஸ்டார் நடிப்பில் வெளியான பாபா திரைப்படத்தின் ரீ – ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

பாபா ரீ- ரிலீஸ்

பாட்ஷா, வீரா, அண்ணாமலை உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்கியப் படம் தான் பாபா. இந்த திரைப்படம் கடந்த 2002 ஆகஸ்ட் 15ம் தேதி வெளியானது.  பாபா படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன் படத்தையும் தயாரித்திருந்தார் ரஜினிகாந்த். இந்நிலையில், பாபா திரைப்படம் மீண்டும் வெளியாகும் என ஏற்கனவே படக்குழு அறிவித்திருந்தது. 

பாபா படம் மீண்டும் வெளியாகும் என்ற செய்தி  இணையத்தில் பரவியதில் இருந்து கடந்த ஒரு வார காலமாக ரசிகர்கள், ஊடகங்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. 

ட்ரெய்லர்

20 ஆண்டுகளுக்கு பிறகு டிஜிட்டல் முறையில் மெருகூட்டப்பட்டு, மறு எடிட்டிங் செய்யப்பட்டு பாபா பட்ம மறுவெளியீடு செய்யப்பட உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி 2 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை யூடியூபில் பெற்றது.

ரீ- ரிலீஸ் தேதி அறிவிப்பு

ரஜினிகாந்தின் பிறந்த நாளான வரும் டிசம்பர் 12 ல்  பாபா படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட  நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பாக டிசம்பர் 10 தேதியே திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.