வெறும் காலில்.. உடைந்த சேருடன்.. பல கிலோ மீட்டர்.. என்ன நடந்தது ஒடிசாவில்.!

asfvxj

ஒடிசா மாநிலத்தில் உள்ள நபரங்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி, முதியோர் ஓய்வூதிய பணம் வாங்குவதற்காக வங்கிக்கு பல கிலோ மீட்டர் உடைந்த சேரின் உதவியால் நடந்தே சென்ற சம்பவம் மனதை உலுக்கியுள்ளது.

வெறும் காலில்.. உடைந்த சேருடன்.. பல கிலோ மீட்டர்..

இந்த சம்பவம் ஒடிசா மாநிலத்தில் ஜாரிகான் தொகுதியில் உள்ள பானுகுடா என்ற கிராமத்தில் அரங்கேறி இருக்கிறது. அந்த மூதாட்டியின் பெயர் சூரிய ஹரிஜன். அந்த மூதாட்டி உடைந்த சேரின் மூலம் வெறும் காலுடன் கடும் வெயிலில் முதியோர் உதவித்தொகை வாங்குவதற்காக பல கிலோ மீட்டர் நடந்தே சென்ற சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. தேவைப்படும் குடிமக்களுக்கு உதவுவதற்காக அரசாங்க திட்டங்கள் நடைமுறையில் இருந்தாலும், சூர்யா ஹரிஜன் போன்றார்களால் பலன்களைப் பெற முடியவில்லை என்று பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். 

மூதாட்டி மிகவும் வறுமையான சூழலில் வாழ்ந்து வருகிறார். இவரது மூத்த மகன் வெளி மாநிலத்தில் வேலை செய்து குடும்ப தேவையை பூர்த்தி செய்து வருகிறார். இளைய மகன் மூதாட்டியுடன் தங்கி மற்றவர்களின் கால்நடைகளை மேய்த்து வருகிறார். இதற்கு முன்னதாக, சூர்யா ஹரிஜன் முதியோர் உதவிப் பணத்தை நேரடியாக கையிலேயே வாங்கி இருக்கிறார். ஆனால், தற்போது உதவித்தொகை பணம் நேரடியாக அவர்களின் வங்கிகணக்கிற்கே செலுத்தும் நடைமுறை உள்ளது. சில நேரங்களில் சூர்யா ஹரிஜனின் இடது கட்டை விரல் ரேகை சரியாக பொருந்தாததால் அவருக்கு பணம் வழங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது என்று வங்கி அதிகாரி தெரிவிக்கிறார்.

கிராம நிர்வாகம் உத்தரவாதம்

சூர்யா ஹரிஜனின் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த நான்கு மாதங்களாக உதவித்தொகை வாங்கவில்லை அதனால், வங்கிக்கு செல்ல நேர்ந்ததாக கூறப்படுகிறது. சூர்யா ஹரிஜனின் உடல்நிலை மிக மோசமான சூழ்நிலையிலும் உடைந்த நாற்காலியைப் பயன்படுத்தி வங்கிற்கு சென்றுள்ளார். அந்த மூதாட்டி அடிக்கடி அவரது பஞ்சாயத்து அலுவலகத்தில் தனக்கு உதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்தும் எந்தவித பலனும் கிடைக்கவில்லை. தற்போது மூதாட்டியின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், மூதாட்டிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் குறிப்பாக, உதவிப்பணத்தை நேரடியாக அவரது வீட்டிற்கே சென்று ஒப்படைத்து விடுவதாக அந்த கிராம நிர்வாகம் உத்தரவாதம் அளித்துள்ளது.