லாரி கவிழ்ந்ததில் சாலையில் உடைந்து சிதறிய 25,200 பீர் பாட்டில்கள்

beer lorry accident

ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி

செங்கல்பட்டு பீர் கம்பெனியில் இருந்து 25,200 பீர் பாட்டில்களை ஏற்றிக் கொண்டு சரக்கு லாரி ஒன்று புறப்பட்டது. லாரியை பெரம்பலூர் பகுதியை சேர்ந்த செல்வக்குமார் (40) என்பவர் இயக்கி வந்தார்.  அந்த லாரி திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அடுத்த பள்ளகவுண்ட பாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டு இருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக சரக்கு லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த 25,200 பீர்பாட்டில்களும் சாலையில் விழுந்து உடைந்து சிதறியது. 

சாலையில் உடைந்து சிதறிய 25,200 பீர் பாட்டில்கள்

பாதிக்கும் மேல் பீர் பாட்டில்கள் உடையாமலும் இருந்தது. அப்போது அங்கு திரண்ட பொதுமக்கள் விபத்தினை பார்த்ததும், கீழே சிதறிக்கிடந்த பீர் பாட்டில்களை யாரும் எடுத்து செல்ல விடாமல் அரண் அமைத்து நின்றனர். போலீசார் வரும் வரைக்கும், பொதுமக்கள் யாரும் எடுத்து செல்ல இயலாமல் அவர்கள் அரண் அமைத்து தடுத்து நின்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 

அரண் அமைத்த பொதுமக்கள்

விபத்துகளில் காய்கறிகள் கிடைத்தால் கூட அள்ளிச்செல்லும் காலத்தில், ரோடெல்லாம் சிதறிக்கிடந்த பீர் பாட்டில்களை யாரும் எடுத்துச் செல்ல விடாமல் பொதுமக்கள் அரண் அமைத்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த ஊத்துக்குளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.