பாஜக மாநிலங்களை அழிக்கிறது.. முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!

MK Sta

தேசிய அளவில் மூன்றாவது அணி அமைப்பது பாஜகவுக்குத்தான் பலனளிக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு ஆங்கில இதழில் தனது கருத்தை தெரிவித்துள்ளார். 

பாஜக மாநிலங்களை அழிக்கிறது

இதுதொடர்பாக, அவர் பேசியதாவது, "மத்தியில் பாஜகவை எதிர்க்க எதிர்க்கட்சிகள் காங்கிரஸுடன் கைகோர்க்க வேண்டும் எனவும், எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணையாததால் தான் பாஜக தொடர்ந்து வெற்றி பெறுகிறது. மாநிலங்களின் ஒன்றியமே ‘இந்தியா’ ஆனால் பாஜக மாநிலங்களை அழிக்கிறது என்றும் பேசியுள்ளார்.  அனைத்து மக்களுக்குமான இந்தியாவை ஒரே மொழி ஒரே மதம் என மாற்ற முயற்சிக்கும்  பாஜக நாட்டை எதேச்சதிகாரத்தின் கீழ் கொண்டுவர பாஜக முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

தேசிய முகம் அவசியம்

பாஜக அரசியலமைப்பை அழிக்க நினைப்பதாகவும், பாஜக மீண்டும் வெற்றி பெற்றால் இந்தியா தற்போது இருப்பதைப் போல இருக்காது எனவும் அச்சம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலை பொறுத்தவரையில் மாநிலங்களில் பிராந்திய கட்சிகள் வலுவாக இருந்தாலும் தேசிய முகம் அவசியம், அந்த முகம் காங்கிரஸ் கட்சியே என்றும், ராகுல் காந்தி இந்தியாவின் நம்பிக்கையாக பார்க்கப்படுகிறார் என்றும் பேசியுள்ளார்.  

பொதுவான வேட்பாளரை நிறுத்த வேண்டும்

எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க சில பரிந்துரைகளை நிதிஷ்குமாருக்கு வழங்கியிருக்கிறேன் என தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒரு மாநிலத்தில் வலுவாக உள்ள பிராந்திய கட்சியே கூட்டணிக்கு தலைமையேற்க வேண்டுமெனவும், கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை என்றாலும் தொகுதி பங்கீட்டை செய்ய வேண்டும் எனவும், இரண்டும் பயன் அளிக்கவில்லை என்றால் ஒரு பொதுவான வேட்பாளரை நிறுத்த வேண்டும் எனவும் பரிந்துரை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். 

கூட்டு நடவடிக்கை குழுவை அமைக்க வேண்டும்

இதுவுமே கட்சிகளுக்கு சரியானதாக தென்படவில்லையென்றால் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைய வேண்டுமெனவும், எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஒரு பொதுவான செயல் திட்டத்தை உருவாக்கி கூட்டணி சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்ய பொதுவான கூட்டு நடவடிக்கை குழுவை அமைக்க வேண்டுமென தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்". 

மம்தா பானர்ஜி, காங்கிரஸ், இடதுசாரிகளுக்கு இடையே இருக்கும் வேறுபாடு குறித்து தனது கருத்தை பகிர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் மம்தா பானர்ஜி பங்கேற்றுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.