ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவின் தியாகத்தால் தான் இந்திய எழுந்து நிற்கிறது - வானதி ஸ்ரீனிவாசன்

vanathi

ஆர்.எஸ்.எஸ் என்ற இயக்கம் பிறந்ததே சுதந்திர போராட்டத்தில் தான், ஆர்.எஸ்.எஸ். - ல் இருந்த பலரும் சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்தவர்கள் தான் என்று காங்கிரஸின் விமர்சனத்திற்கு பதிலளித்த வானதி

பாஜகவை கடுமையாக விமர்சித்த கார்கே

கடந்த சில நாட்களுக்கு முன் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை கடுமையாக தாக்கி பேசினார். அப்போது, நாட்டுக்காகவும், சுதந்திரத்திற்காகவும் உயிர்தியாகம் செய்ததும், உடமைகளை தியாகம் செய்ததும் காங்கிரஸ் கட்சிதான். தேசிய உணர்வை போற்றக் கூடிய கட்சி இன்று வரை காங்கிரஸ் மட்டுமே. பாஜகவை சேர்ந்த எந்த தலைவரும் இதுவரை நாட்டிற்காக எந்த தியாகத்தையும் செய்ததில்லை. பாஜக, ஆர்.எஸ்.எஸ் இவைகள் சுதந்திரத்திற்கு பிறகே தோன்றி வெறுப்பு பிரச்சாரத்தை செய்து வருகிறது. மொத்தத்தில் பாஜக தலைவர்களின் வீட்டு நாய் கூட இதுவரைக்கும் எந்த தியாகத்தையும் செய்ததில்லை என காட்டமாக பேசினா. இதற்கு மக்களவையில் எதிர்ப்பு தெரிவித்த பாஜக உறுப்பினர்கள், கார்கே மன்னிப்பு கேட்க வேண்டும் என கோஷம் எழுப்பினர். 

சுதந்திர போராட்டத்தில் இருந்த ஆர்.எஸ்.எஸ் வீரர்கள்

இந்நிலையில், இதுதொடர்பாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பாஜக சட்டமன்ற உறுப்பினரும், தேசிய மகளிரணி செயலாளருமான வானதி ஸ்ரீனிவாசன், ஆர்.எஸ்.எஸ், பாஜக நிர்வாகிகள், தொண்டர்களின் தியாகத்தால் தான் இன்றைய இந்தியா எழுந்து நிற்பதாக கூறியுள்ளார். மேலும், ஆர்.எஸ்.எஸ் என்ற இயக்கம் பிறந்ததே சுதந்திர போராட்டத்தில் தான் என்றும், ஆர்.எஸ்.எஸ். - ல் இருந்த பலரும் சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்தவர்கள் தான் என்றும் கூறியுள்ளார். 

பாஜக, ஆர்.எஸ்.எஸ் மீது தொடர்ந்து அவதூறு

இந்த உண்மைகளை மறைத்துவிட்டு சுதந்திர போராட்டத்தில் பாஜக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு தொடர்பு இல்லை என்று திரும்ப திரும்ப அவதூறு பரப்பி வருவதாகவும் தெரிவித்துள்ளார். வானதி ஸ்ரீனிவாசனின் இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் பலர் ஆதரித்தும், எதிர்த்தும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.