கிராமப்புற, பிற்படுத்தப்பட மக்களுக்கு எதிராக பாஜக செயல்படுகிறது. - முன்னாள் பாஜக தலைவர் விஸ்வநாத்

h.vishvanath

அடுத்தடுத்து வெளியேறும் பாஜக தலைவர்கள்

பாஜகவில் முக்கிய பொறுப்புகளில் அங்கம் வகித்தவருமான ஜெகதீஷ் ஷெட்டர் அம்மாநில அரசியலில் முக்கிய புள்ளியாக இருந்தவர். இந்தமுறை பாஜக தனக்கு சீட் வழங்காத நிலையில், கட்சியிலிருந்து விலகி அண்மையில் காங்கிரஸில்  இணைந்தார். தொடர்ந்து காங்கிரஸ் கட்சிகாக தேர்தல் பணியாற்றி வரும் ஜெகதீஷ் ஷெட்டர் கர்நாடகாவின் ஹூப்ளி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே 3 எம்.எல்.ஏக்கள் பாஜகவிலிருந்து விலகிய நிலையில், அதில் இருவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

அடிப்படை தத்துவத்திற்கு எதிராக உள்ள பாஜக

இந்நிலையில், பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஹெச். விஸ்வநாத் அக்கட்சியிலிருந்து விலகி இன்று காங்கிரஸில் இணைந்தார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது அவர் கூறியதாவது; அடிப்படையில், நான் ஒரு கிராமப்புறத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவன். சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர், கிராமப்புறத்தினர் சேர்ந்து வாழ்வதே நமது அடிப்படை தத்துவம். ஆனால் பாஜக அதற்கு எதிராகவே செயல்படுகிறது. இதனால் தான் நான் பாஜகவிலிருந்து காங்கிரஸின் இணைய முடிவெடுத்துள்ளேன். இந்த தேர்தலில் காங்கிரஸ் நிச்சயம் வெல்லப் போகிறது. ஆனால் அதற்காக மட்டும் நான் காங்கிரஸில் சேரவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.