தமிழகத்தில் 5 தினங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் 

tn rain

தணிந்த வெயில் காலம்

தமிழகத்தில் கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில், கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில், வெயில் தணிந்து குளிர்ச்சி நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில், அடுத்த 5 தினங்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, 

மிதமான மழைக்கு வாய்ப்பு 

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 24-05-2023 மற்றும் 25-06-2023:- தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 26-06-2023 முதல் 28-06-2023 வரை  தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த இரு தினங்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசானது மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.