சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் 2023-2024 - Live Updates

website post (38)

சென்னை மாநகராட்சிக்கு மேயர், வார்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு ஒரு ஆண்டு நிறைவு செய்த நிலையில், இரண்டாவது 2023-2024 நிதியாண்டுக்கான சென்னை மாநகராட்சி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து வருகிறார். 

2022-23 நிதி ஆண்டில் மக்கள் பிரதிநிதிகள் பதவியேற்ற குறுகிய காலத்திலேயே பட்ஜெட் தாக்கல் செய்ததால் அறிவுப்புகள் எண்ணிக்கை குறைவாக இருந்த நிலையில், 2023-24 நிதியாண்டில் எழுபதற்கும் மேற்பட்ட அறிவிப்புகள் இடம்பெறும் என தகவல் வெளியாகி இருந்தன. இந்தநிலையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் 83 புதிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளதாக மேயர் பிரியா தெரிவித்துள்ளார். மேலும் பட்ஜெட்டில்; 

* சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க ஆலோசகர்கள் நியமனம் செய்யப்படும்.

* சென்னை அரசு பள்ளிகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ள ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 

* சென்னையில் பள்ளி மாணவர்களுக்கு மாலையில் சிறுதீனி எனப்படும் ‘ஸ்நாக்ஸ்’ வழங்கப்படும்.

* சென்னை மாநகராட்சியின் இணைக்கப்பட்ட 139 பள்ளிகளுக்கு ரூ.15 கோடியில் கட்டமைப்பு வசதிகள்.

* கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகளை அதிகரிக்க பள்ளிகளில் மாதிரி ஐ.நா சபை குழு அமைக்கப்படும்.

* மாநகராட்சி உறுப்பினர்களின் மேம்பாட்டு நிதி ரூ.35 லட்சத்திலிருந்து ரூ.40 லட்சமாக அதிகரிப்பு. 

* சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் 83 புதிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளதாக மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.