குத்தாட்டம் போட்டது யார்? எம்ஜிஆர் – ஜெயலலிதாவா? உதயநிதி – நயன்தாராவா?

udhayanidhi Mgr

உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளதையடுத்து ஜெயா பிளஸ் தொலைக்காட்சியில் உதயநிதி மற்றும் நயன்தாரா  குறித்து தவறான செய்தி வெளியிடப்பட்டுள்ளதால் திமுகவினர் கொந்தளித்துள்ளனர். 

உதயநிதி ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனான உதயநிதி, தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக உள்ளார். இவர் நடிக்க வருவதற்குமுன் ரெட் ஜெயண்ட் மூவிஸ் எனும் தயாரிப்பு மற்றும் படவிநியோக நிறுவனத்தை நடத்தி வருகிறார். தற்போது இவரது ரெட் ஜெயண்ட் நிறுவனமே தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறக்கிறது. 

உதயநிதி சினிமாவை தாண்டி அரசியலிலும் ஈடுப்பட்டு வந்தார். இவரது தீவிர முயற்சி தற்போது இவரை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து இவர் தமிழக சட்டமன்ற அமைச்சராகவும் பொறுப்பேற்க உள்ளார். 

ஜெயா பிளஸின் கவர்ச்சிகர வீடியோ

இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் தமிழக அமைச்சராவதை ஏற்க முடியாத அதிமுகவிற்கு சொந்தமான ஜெயா பிளஸ் தொலைக்காட்சி, உதயநிதி குறித்தும் அண்மையில் திருமணமாகி குழந்தை பெற்றுள்ள நடிகை நயன்தாரா குறித்தும் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி ஆபாசமாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். 

அந்த வீடியோவில், நடிகை நயன்தாராவை உதயநிதி ஸ்டாலின் காதலித்ததாகவும், அதனை மறுத்த நயன்தாராவை உதயநிதி ஆசை வார்த்தைகள் கூறியும், அதற்கு அடங்காத பட்சத்தில் மிரட்டியும் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதோடு, எந்த முயற்சியும் கைக்கொடுக்காததால் உதயநிதி விஷம் அருந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வதந்தியை பரப்பி வருகிறது. இந்த வீடியோவிற்கு, “திமுக எனும் குடும்ப கூடாரம், விளையாட்டு பிள்ளைக்கு பதவி” என்று தலைப்பாக வைத்துள்ளனர். 

ஜெயலலிதாவை வம்பிழுத்த நெட்டிசன்கள்

இதனைப் பார்த்த உதயநிதி மற்றும் திமுக ஆதரவாளர்கள் ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர் இருவரும் கவர்ச்சி என்ற பெயரில் ஆபாசமாக நடித்த திரைப்படக் காட்சிகளை வெளியிட்டு “குத்தாட்டம் போட்டது எம்ஜிஆர் – ஜெயலலிதா தான்” என்றும், பொன்மன செம்மல் என்றழைக்கப்படும் எம்.ஜி.ஆர் ஒரு பொம்பள செம்மல் என்று தரக்குறைவான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதோடு, ஜெயலலிதாவின் கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டு, “இப்படித்தான் ஜெயலலிதா அரசியலுக்குள் வந்தார்” என்று விமர்சித்து வருகின்றனர்.

 

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02dxkRrePwKJRpuWmyPT9FqgofySPiopM11ruoMjT2MGQwsTTU2EH8Gw5RYfyt6PT4l&id=100013287512879&sfnsn=wiwspwa&mibextid=VhDh1V

 

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02cGnfUrQ6a7hz944RRS8xGd9HdcLuPYNxy4VJZ2RDtBxaK5CVLhsvURQPwbBK9y9Rl&id=100079863526784&sfnsn=wiwspwa&mibextid=2Rb1fB

 

https://m.facebook.com/watch/?v=708086507370774&paipv=0&eav=AfYqiEf5Walk29GpN7de3JhqWlSHWv_NcR-5lS4xuEHN5lWXFwgig8RAvImw8kulnuE&_rdr