பொங்கலுக்கு என்ன பரிசு கொடுக்கலாம்- மு.க.ஸ்டாலின் ஆலோசனை

pongal gifts

நெருங்கியுள்ள பொங்கல் பண்டிகை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் அரசு சார்பில் குடும்ப அட்டை தாரர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம். முந்தைய அதிமுக ஆட்சியில், அத்தியாவசிய தொகுப்புகளுடன் ரூ.2000 பணமும் வழங்கப்பட்டது. இதனையடுத்து திமுக ஆட்சி அமைந்தவுடன் கடந்த ஆண்டு 21 வகையான பொங்கல் பொருட்கள், கரும்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டது. பணம் தராமல் பொருளாக கொடுத்ததற்கு ஒரு தரப்பினர் பாராட்டினாலும், வெறும் பொருள் மட்டும் கொடுத்ததற்கு ஒரு தரப்பினர் ஆட்சேபமும் தெரிவித்தனர். 

ரூ.1000 வழங்கப்படலாம் என தகவல்

இந்நிலையில், பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதையொட்டி, பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்படலாம் என தகவல் வெளியான நிலையில் பொங்கல் பரிசு தொடர்பால குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

முதலமைச்சர் ஆலோசனை

இந்தாண்டு நியாயவிலை கடைகளில் பொங்கல் பண்டிகை பரிசாக பணமும் அதனுடன் இடம்பெற உள்ள பொங்கல் தொகுப்புகள் வழங்கப்படுவது குறித்து முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.