ஆஸ்கார் வென்ற இந்திய படங்கள் - வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர்

-RRR

ஆஸ்கார் விருது பெற்ற இந்திய திரைப்படங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆஸ்கார் வென்ற இந்திய படங்கள் 

சினிமா உலகில் உயரிய விருதாக கருதப்படும் 95 வது விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் இந்தியாவிலிருந்து ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் சிறந்த பாடலாக தேர்வு செய்யப்பட்டதை தொடந்து அப்பாடல் இசையமைபாளர் கீரவாணிக்கு ஆஸ்கார் வழங்ப்பட்டது. அதேபோல், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட The Elephant Whispers என்ற ஆவணப்படம் சிறந்த ஆவண குறும்படமாக தேர்தெடுக்கப்பட்டு ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது. இதனையடுத்து ஆர்.ஆர்.ஆர் மற்றும் The Elephant Whispers படக்குழுவினருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

ஆர்.ஆர்.ஆர். படக்குழுவினருக்கு பாராட்டு

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆஸ்கார் விருதுபெற்ற இந்திய படங்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். ஆர்.ஆர்.ஆர் படம் தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட அவர், முதல் முறையாக இந்தியா மற்றும் ஆசியா அளவில் சிறந்த பாடலுக்காக ஆஸ்கார் விருது வென்று வரலாறு படைத்துள்ள ஆர்.ஆர்.ஆர். படக்குழுவினரை வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.

இரண்டு பெண்கள் ஆஸ்கார் வென்றதை விட சிறந்த செய்தி எதுவுமில்லை

அதேபோல், சிறந்த ஆவண குறுபடத்திற்கு ஆஸ்கார் விருது வென்ற The Elephant Whispers படக்குழுவினரை பாராட்டிய முதலமைச்சர் ”இந்திய தயாரிப்பிற்காக இரண்டு பெண்கள் ஆஸ்கார் விருது வென்றதை விட சிறந்த செய்தி வேறெதுவுமில்லை, The Elephant Whispers ஆவணப்பட அனைத்து புகழுக்கும் பெருமைக்கும் தகுதியானது” என்று தெரிவித்துள்ளார்.