கொளத்தூர் விசிட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் - தொடங்கி வைத்த முதலமைச்சர்.

cm visit mkstalin

கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பந்தர் கார்டன், பெருநகர சென்னை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் பல்வேறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு வந்தது. இந்நிலையில், ரூ.4.37 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட உள்ள இந்த மறுசீரமைப்பு பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து சென்னை, கொளத்தூர் பேப்பர் மில்ஸ் சாலையில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.8.72 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது . பெருநகர சென்னை மாநகராட்சி மூலதன நிதியிலிருந்து கட்டப்பட உள்ள இந்த 37 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

 

அதேபோல், தீட்டி தோட்டம் முதல் தெருவில் ரூ.1.27 கோடி புனரமைக்கப்பட்டு நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட இறகுபந்து உள்விளையாட்டு அரங்குகளை திறந்து வைத்தார். இந்நிகழ்வுகளின்போது, மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலாநிதி வீராசாமி, ஆர்.கிரிராஜன், சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, மேயர் ஆர்.பிரியா, துணைமேயர் மு.மகேஷ்குமார் ஆகியோருடன் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.