ஹிமாச்சல பிரதேச தேர்தல் - ஆட்சியை பிடிக்கும் காங்கிரஸ்

himachal election

குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு அண்மையில் நடைபெற்றது. கடந்த முறை ஆட்சி இருந்த பிஜேபி இந்த முறையும் ஆட்சியை கைப்பற்ற தீவிரம் காட்டியது.  அதேபோல் காங்கிரஸும் மீண்டும் ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி வந்தது. ஹிமாச்சல பிரதேசத்தின் தேர்தல் முடிகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்று காலை முதல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. 

முட்டிமோதும் பிஜேபி -காங்கிரஸ்

மொத்தமுள்ள 68 சட்டமன்ற தொகுதிகளில் 35 இடங்களில் வெற்றி பெரும் கட்சி ஆட்சியை பிடிக்கும். இத்தேர்தலையொட்டி பிஜேபி - காங்கிரஸ் கட்சிகள் தீவிரம் பிரச்சாரம் மேற்கொண்டன. இதனால் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு பலரையும் தொற்றிக் கொண்டுள்ளது. இந்நிலையில், தேர்தல் ஆணையம் தேர்தல் முடிவுகளை வெளியிட்டு வருகிறது. காலை 10 மணி நிலவரப்படி இமாச்சலபிரதேசத்தில் 36 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. பாஜக 28 இடங்களில் முன்னிலையில் உள்ளது. சுயேட்சைகள் 3 இடங்களில் முன்னிலை வகித்தன. 

ஆட்சியை பிடிக்கும் காங்கிரஸ்

இந்நிலையில், அதன்பிறகு வெளிவந்த தேர்தல் முடிவுகள் இரு கட்சிகளையும் மாறி மாறி முன்னிலை பெற வைத்தன. இதனால் அம்மாநில மக்களுக்கு உச்சகட்ட பரபரப்பு தொற்றிக் கொண்டது. இந்நிலயிலையில் தற்போதைய நிலவரப் படி, காங்கிரஸ் வேட்பாளர்கள் 39 இடங்களில் முன்னிலையில் உள்ளனர். பாஜக வேட்பாளர்கள் 25 இடங்களில் முன்னிலையில் உள்ளனர்.  4 இடங்களில் சுயேட்சை வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். தேர்தல் முடிவுகள் இன்னும் சற்று நேரத்தில் முடிய உள்ள நிலையில், காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.