ஒப்பந்த ஓட்டுநர்கள் தேவை.. போக்குவரத்து துறை அறிவிப்பு.!

website post - 2023-04-05T130157

தமிழக அரசின் போக்குவரத்து துறையில் ஒப்பந்த அடைப்படையில் ஊழியர்களை நியமிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. 

அரசு போக்குவரத்து துறை ஊழியர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஊதிய உயர்வு போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்கள் அவசர பயணங்களை கூட மேற்கொள்ள முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். இந்த இக்கட்டான நிலையை சமாளிக்க அரசு தற்காலிக ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களை நியமித்து பேருந்துகளை இயக்கியது. இதனால் அரசு போக்குவரத்து ஊழியர்கள் மிகுந்த அதிருப்தி அடைந்தனர்.

இந்நிலையில், தற்போது அரசு பேருந்துகளை இயக்க ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்களை நியமிக்க போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது. இதில் 400 ஓட்டுநர்களை நியமிக்க போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை, நாகை, கும்பகோணம் உள்ளிட்ட வழித்தடங்களில் ஒப்பந்த ஓட்டுநர்களை நியமிக்க இருப்பதாகவும், ஒப்பந்த ஓட்டுநர்கள் 12 மாதங்கள் பணியில் இருப்பார்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. சென்னையைச் சேர்ந்த 4 நிறுவனங்கள் டெண்டர் எடுக்க விண்ணப்பம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.