தனது 100-வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதிரடியாக ஆடி இரட்டை சதம் அடித்த வார்னர் 

david warner

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி தொடங்கியது. இந்த டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னருக்கு 100 வது டெஸ்ட் ஆகும். இதில் முதல் இன்னிங்சில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 189 ரன்னில் சுருண்டது.

100 வது சதமடித்த வார்னர் 

இதையடுத்து ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சை ஆடியது. இதில் ஆஸ்திரேலிய அணி தரப்பில் கவாஜா 1 ரன்னிலும், லபுஸ்சேன் 14 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து வார்னர், ஸ்மித் இணை நேர்த்தியாக ஆடி ரன்களை குவித்து வந்தனர். இதில் 100 வது டெஸ்ட்டில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய வார்னர் சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் வார்னர் தனது 100வது டெஸ்ட் போட்டியில் தனது 25வது சதத்தை அடித்து ரசிகர்களை உற்சாகமடைய வைத்தார். 

இரட்டை சதமடித்த வார்னர்

மேலும், ஆஸ்திரேலியா அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் 8,000 ரன்களை கடந்த 8வது ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை வார்னர் படைத்தார். மேற்கொண்டு தொடர்ந்து ஆடிய டேவிட் வார்னர் அற்புதமாக விளையாடி சதத்தை இரட்டை சதமான மாற்றினார். இதன் மூலம் தனது 100-வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்து வியக்க வைத்தார். 
                 
                              இதன் மூலம் ஜோ ரூட்டுக்குப் பிறகு தனது 100வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் வார்னர். கடந்த ஆண்டு சென்னையில் நடந்த இந்தியாவுக்கு எதிரான தனது 100வது டெஸ்டில் ரூட் 218 ரன்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.