ஃபிபா 2022: உலககோப்பையை அறிமுகப்படுத்தும் தீபிகா படுகோனே..! 

Deepika padukone

உலகக்கோப்பை கால்பந்து ஆட்டத்தின் இறுதிப் போட்டியில் நடிகை தீபிகா படுகோனே கலந்துகொண்டு உலகக் கோப்பையை அறிமுகம் செய்துவைக்கிறார். 

ஃபிபா உலகக்கோப்பை

உலக கால்பந்தாட்ட ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருந்த கால்பந்து உலகக்கோப்பை தொடரான ஃபிபா உலகக்கோப்பை கடந்த நவ.20 தேதி தொடங்கியது. இந்த உலகக்கோப்பை தொடர் மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான கத்தாரில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

நிறைவு பெற்ற நாக் அவுட் சுற்றுகள்

ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு இடையே விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த உலகக்கோப்பையில் 32 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த தொடரில், லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்து 16 அணிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றான நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின. தற்போது நாக் அவுட சுற்றுகளும் முடிந்து கால் இறுதிபோட்டிகள் நடைபெற உள்ளன.

உலகக்கோப்பையை அறிமுகப்படுத்தும் தீபிகா படுகோனே

இந்நிலையில், உலகக் கோப்பை கால்பந்து ஆட்டத்தின் இறுதிப் போட்டியில் நடிகை தீபிகா படுகோனே கலந்துகொண்டு உலகக் கோப்பையை அறிமுகம் செய்துவைக்கிறார். 

இந்த தொடரின் இறுதிப்போட்டி கத்தார் நாட்டில் உள்ள லுஸைல் ஐகானிக் மைதானத்தில் டிசம்பர் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. 

இதன்மூலம் இந்த அங்கீகாரம் பெறும் முதல் இந்திய நட்சத்திரம் என்ற பெருமைக்கும் தீபிகா உரியவராகிறார். 36 வயதான தீபிகா படுகோனே உலகில் அதிகம் பேரால் பார்க்கப்படும் விளையாட்டு நிகழ்வில் இந்த அங்கீகாரம் பெறும் முதல் இந்திய நட்சத்திரம் என்ற பெருமைக்கும் தீபிகா உரியவராகிறார்.இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தீபிகா படுகோனே விரைவில் கத்தாருக்கு செல்லவுள்ளார்.