ஆடி அமாவாசையை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துரையில் நேர்த்திகடன் செலுத்திய பக்தர்கள்

amma mandabam trichy

முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் நிகழ்வு

பொதுவாக அமாவாசை தினங்களில் மாதம் தோறும் தங்களது வீடுகளில் இருந்து தங்களது முன்னோர்களை நினைத்து வழிபடுவார்கள். அதே போல் முன்னோர்கள் உயிரிழந்த நாளில் குறிப்பிட்ட நட்சத்திரத்தில் அவர்களுக்கு திதி கொடுப்பது என்பது வழக்கமான நிகழ்வு ஆனால் முன்னோர்கள் உயிரிழந்த சரியான நாளில் திதி கொடுக்க முடியாதவர்கள் அல்லது முன்னோர்கள் பலருக்கு ஒரே நாளில் திதி கொடுக்க நினைப்பவர்கள் ஆடி, புரட்டாசி போன்ற மாதங்களில் வரும் அமாவாசை நாட்களில் அவர்களுக்கு திதி கொடுப்பது என்பது சிறப்பு வாய்ந்தது என்று கருதப்படுகிறது.

அதிகாலையிலேயே திரண்ட பக்தர்கள்

இந்நிலையில் திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள அம்மா மண்டப படித்துறையில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக திருச்சி மட்டுமல்லாது புதுக்கோட்டை, பெரம்பலூர் அரியலூர் நாமக்கல் சேலம் கரூர் போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அதிகாலை முதலே திரண்டு தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். காவிரி கரைகளில் திதி கொடுக்கும் இடங்களில் திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துரை மிகவும் பிரசித்தி பெற்ற இடமாகும்.