என்னோட ஓய்வை நீங்க முடிவு பண்ணிட்டீங்களா? - தோனி பதிலடி 

Dhoni

என்னோட ஓய்வை நீங்களே முடிவு பண்ணிட்டீங்களா என்ன என டோனி மோரிசனுக்கு சிஎஸ்கே கேப்டன் தோனி பதிலடி கொடுத்துள்ளது சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் 

மார்ச் 31ம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் ஐ.பி.எல். 16வது சீசனில் சென்னை அணி கூல் கேப்டன் தோனியின் தலைமையின் கீழ் விளையாடிவருகிறது. இந்த சீசனில் இதுவரை 9 போட்டிகளில் விளையாடிவுள்ள சென்னை அணி, 5 போட்டிகளில் வெற்றியும், 4 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. இதன் மூலம் 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது சென்னை. இதுவரை நடந்த போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் இரண்டு முறையும் தோல்வியை சந்தித்த சென்னை, குஜராத் மற்றும் பஞ்சாப் அணிகளுடன் தலா ஒருமுறை தோல்வியை சந்தித்துள்ளது. இந்நிலையில் இன்று லக்னோ அணியுடன் தனது 10வது லீக் போட்டியை சென்னை விளையாடிவருகிறது. டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்து, லக்னோ அணிக்கு தண்ணீர் காட்டிவருகிறது. இன்றைய போட்டியில் சென்னை அணி வெற்றிபெற்றால் முதல் இரண்டு இடங்களில் ஏதாவது ஒரு இடத்தை பிடித்து, பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை மேலும் பிரகாசமாக்கும். 

தோனிக்கு கடைசி சீசன்?

இந்த சீசன் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பு இருந்தே தோனிக்கு இதுதான் கடைசி ஐபிஎல் சீசன் என பலரும் கூறிவருகின்றனர். அதனாலேயே இந்தமுறை தோனி விளையாடும் அனைத்து போட்டிகளிலும், வழக்கத்தைவிட அதிகமாக ரசிகர்கள் தோனிக்கு ஆரவாரமான ஆதரவை அளித்துவருகின்றனர். இந்நிலையில் இன்றைய போட்டி தொடங்குவதற்கு முன்பாக, நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரரும், தற்போது வர்ணனையாளராக பணியாற்றி வரும் டேனி மோரிஸன், தோனியிடம், “உங்களுடைய இந்த கடைசி சீசனை நீங்கள் எஞ்சாய் பண்ணுகிறீர்களா?” என சிரித்துக்கொண்டே கேட்டார்.