கலைஞரின் நூற்றாண்டு விழாவில் ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்திய திமுகவினர்

trichy dmk

கலைஞரின் நூற்றாண்டு விழா

மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா இன்று தொடங்கப்படும் என முதலமைச்ச அறிவித்த்திருந்தார். இந்நிலையில், எதிர்பாராதவிதமாக ஒடிஷா மாநிலத்தில் 3 ரயில்கள் ஒரே இடத்தில் விபத்துக்குள்ளாகி 280 பேர் பலியாகியுள்ளனர். இந்த கோர விபத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில், இன்று தமிழ்நாடு அரசு சார்பில் துக்க நாளாக கடைபிடிக்கப்பட்டும் என்றும் கலைஞர் நூற்றாண்டு நிகழ்ச்சிகள் வேறொரு நாளில் நடத்தப்படும் என முதமலைச்சர் தெரிவித்திருந்தார். 

மாலை அணிவித்து மரியாதை

இதனால் கொண்டாட்டங்களை தவிர்த்து கலைஞரின் உருவ படத்திற்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் திருச்சி மாவட்ட திமுக சார்பில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி தலைமையில் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோர் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


திமுக கொடி ஏற்றம்

இதைத் தொடர்ந்து திமுக கொடி ஏற்றப்பட்டு பின்னர் ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் இறந்தவர்களுக்கான மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மேயர் அன்பழகன், மாமன்ற உறுப்பினர்கள் காஜாமலை விஜி, விஜயலட்சுமி கண்ணன், கோட்டத் தலைவர் துர்காதேவி, மற்றும் மாவட்ட, நகர, கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.