தமிழ்நாடு எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தராக டாக்டர் கே.நாராயணசாமி நியமனம்.! 

vc

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தராக டாக்டர் கே.நாராயணசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். நியமன ஆணையை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கி உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இவர் 3 வருடங்களுக்கு எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தராக தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. டாக்டர் கே.நாராயணசாமி தற்போது சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வராக இருந்து வருகிறார். 

சென்னை, செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரிகளின் முதல்வராகவும் டாக்டர் நாராயணசாமி பணியாற்றி உள்ளார். மருத்துவ துறையில் 33 ஆண்டுகள் பணி அனுபவமும் 13 ஆண்டுகள் நிர்வாக அனுபவமும் கொண்டவர் கே.நாராயணசாமி. 2018 முதல் 2022 வரை சென்னை மருத்துவக் கல்லூரியில் கல்லீரல் துறை இயக்குநராகவும் இருந்துள்ளார். கொரோனா காலகட்டத்தின்போது சிறப்பாக ஆற்றிய பங்களிப்பிற்காக தமிழ்நாடு அரசால் விருது பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . 

டாக்டர் நாராயணசாமி 2018 முதல் 2022 வரை சென்னை மருத்துவக் கல்லூரியில் ஹெபடாலஜி துறைக்கு இயக்குனராகவும் தலைமை தாங்கினார். சென்னை மருத்துவக் கல்லூரியில் ஹெபடோபிலியரி சயின்ஸ் நிறுவனத்தை (IHBS) உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றினார் மற்றும் அதன் இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.