EB-க்கு ஆப்பு வைத்த ED.. அம்பலமான மோசடிகள்.!

eb

தமிழ்நாடு மின் நுகர்வோர் மற்றும் பகிர்மான கழகத்திற்கு சொந்தமான 10 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 360 கோடி ரூபாயை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. 

நிலக்கரி வாங்கப்பட்டதில் ஊழல்

 கடந்த 2001 ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் மின் பகிர்மான கழகம் சார்பில் நிலக்கரி வாங்கப்பட்டதில் ஊழல் நடைபெற்றிருப்பதாக அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராமன் என்பவர் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. மேலும், TANGEDCO-வில் பணியாற்றக்கூடிய அலுவலர்களிடம் விசாரணை நடத்த இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்திருந்தது. 

அமலாக்கத்துறை சோதனை

இந்தநிலையில், கடந்த 24-ம் தேதி சென்னையில் உள்ள 10 இடங்களில் சோதனை மேற்கொண்டனர். சோதனையின் முடிவில், தமிழ்நாடு மின் நுகர்வோர் மற்றும் பகிர்மான கழக அலுவலர்களுக்கு சொந்தமான 10 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.360 கோடி முடக்க பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், முக்கிய ஆவணங்கள், எலக்ட்ரானிக் ஆவணங்கள், சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. 

அம்பலம்

விசாகப்பட்டினம் துறைமுகத்தில் மிக குறைந்த சம்பளத்திற்கு தற்காலிக பணியாளர்களை பயன்படுத்தி சவுத் இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனம் நிலக்கரி ஏற்றுமதி, இறக்குமதி செய்ததாகவும், துறைமுக தொழிலாளர்களை ஏமாற்றி சவுத் இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனம் போலி ஆவணங்கள் மூலம் TANGEDCO-விற்கு பொய் கணக்கு காட்டி மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், TANGEDCO அதிகாரிகள் எதையும் ஆய்வு செய்யாமல் சவுத் இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு விதிகளை மீறி பணத்தைக் கொடுத்தது அம்பலமாகி இருக்கிறது.